இரண்டு நாட்கள்... மூன்று ஆட்கள்... மாணவிக்கு போலீஸ் செய்த கொடுரம்!

பலாத்காரம்

பெண் தெய்வத்தின் பெயரைக் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கல்லூரி மாணவிகள் காணாமல் போவதும், இரண்டு நாள் கழித்து காதலனுடன் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைவதும் வாடிக்கையாக தொடர்கிறது.

தற்போது நாகர்கோவிலில் கல்லூரி மாணவியை லாட்ஜில் அடைத்து வைத்து காதலனும், கத்தி முனையில் அவனது நண்பர்களும் பலாத்காரம் செய்த சம்பவம் மாவட்டத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  என்ன நடந்தது என அதிர்ச்சி​யுடன் விவரித்தனர்அந்தப் பகுதியினர் . ‘‘குமரி மாவட்டம் திக்கணங்கோட்டை சேர்ந்த மாணவி நாகர்கோவில் மையப் பகுதியில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த வேன் கிளீனர் பிரிஜித் என்கிற சுரேஷுக்கும் அந்த மாணவிக்கும் சில நாட்களாக காதல். பிரிஜித்துக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள். அதனை மறைத்துள்ளார். கடந்த 13-ம் தேதி கல்லூரியில் இருந்து விடுமுறைக்காக வீடு திரும்பி மாணவியை பிரிஜித் குழித்துறைக்குச் அழைத்து சென்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை களைக் கூறியுள்ளார். பிரிஜித் சொன்னதை நம்பி இருவருமாக சேர்ந்து நாகர்கோவில் வந்துள்ளனர். நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில் பகுதியில் உள்ள லாட்ஜில் பிரிஜித்துக்கு நெருக்கமான கோபால் என்பவர் ரூம் எடுத்து கொடுத்துள்ளார். இந்த கோபால் போலீஸாக இருக்கும்போது கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டவர். கோபால் லாட்ஜில் ரூம் எடுக்கும்போது பிரிஜித்தும் மாணவியும் கணவன், மனைவி என்றே சொல்லி இருக்கிறார். அதன்பின் பிரிஜித் மாணவியை வலுகட்டாயமாக வாயில் துணிகளை வைத்து பலாத்காரம் செய்து உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி தனது மகளைக் காணவில்லை என தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் மாணவியின் பெற்றோர் புகார் செய்துள்ளனர். போலீஸாரும் மாணவியை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் தனது நண்பர்களான கோபால், தினேஷ், ஞான பிரவீன் ஆகியோரை ரூம்க்கு பிரிஜித் வரவழைத்துள்ளார். அவர்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவியை பிரிஜித் கட்டாயப்படுத்தி இருக்கிறார். மாணவி அதற்கு மறுக்கவே, கத்தியை காட்டி மூன்றுபேரும் மாணவியை வலுகட்டாயமாக 2 நாட்கள் லாட்ஜ் ரூமில் அடைத்துவைத்து பலாத்காரம்

செய்துள்ளனர். தொடர்ந்து பலாத்காரம் செய்யப் பட்டதால் மாணவி கத்திக் கதற ஆரம்பித்துள்ளார். அலறல் சத்தம் கேட்கவே, லாட்ஜில் உள்ளவர்கள் வடசேரி போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுத்து உள்ளனர். போலீஸார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட அனைவரையும் கைதுசெய்தனர். ஆசாரிபள்ளம் மெடிக்கல் காலேஜில் மருத்துவப் பரிசோதனை செய்து 17-ம் தேதி இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத் தனர். மாணவிக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பில் பேசினோம். ‘‘எங்க பிள்ளையை ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றி சீரழித்து விட்டார்கள். கண்டிப்பாக அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்’’ என்பதை மட்டுமே அவர்களால் கண்ணீருக்கிடையில் சொல்ல முடிந்தது.

வடசேரி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.ரமேஷிடம் பேசினோம். ‘‘மாணவி விவகாரம் தொடர்பாக லாட்ஜில் இருந்து தகவல் வந்ததும் உடனே சென்று மாணவியை மீட்டு குற்றவாளிகளையும் கைது செய்தோம். மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கத்திமுனையில் பலாத்காரம், சட்ட விரோதமாக அடைத்து வைப்பு, நம்பிக்கைத் துரோகம், திருமண ஆசைக் காட்டி ஏமாற்றுதல் என்ற பிரிவுகளின் கீழ் குற்றவாளிகளின் மேல் வழக்குப் பதிவுசெய்து உள்ளோம். மாணவிகள் என்ன செய்கிறார்கள் எனப் பெற்றோரும் கவனித்து வரவேண்டும். குறிப்பாக மாணவிகளின்

செல்போன்களை சோதனையிட்டு ஆலோசனை கொடுக்க வேண்டும். லாட்ஜ்களில் அடிக்கடி ரெய்டு நடத்தி வருகிறோம். லாட்ஜுக்கு

வருபவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் அவர் களுக்கு ரூம் கொடுக்காமல் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுக்க வேண்டும். கண்டிப்பாக போலீஸ் ஐ.டி. காட்டினாலும் ரூம் கொடுக்கக் கூடாது. இந்த மாணவி விஷயத்தில் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட போலீஸ்காரர் கோபால் தான் மாணவி பாதிக்கப்பட காரணமாக இருந்துள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

குமரியில் குமரிகள் காணாமல் போவது வாடிக்கையாகி வருகிறது. இந்தச் செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும்​போதே குமரியில் மகளை காணவில்லை என எதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷனில் யாரவது புகார் கொடுத்துக் கொண்டு​தான் இருப்பார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்