கோவை மாநகராட்சி... கோணல் ஆட்சி!

ஊழல்

புகார்கள் அடிப்படையில், மேயர் பதவியில் இருந்து ஒருவர் தூக்கியடிக்கப்பட்டு,  இடைத்தேர்தல் மூலம் இன்னொருவர் மேயராக வந்தது கோவை மாநகராட்சியில்தான். 2011 முதல் 2014 வரை மேயராக இருந்தவர், செ.ம.வேலுச்சாமி. அதன் பிறகு, இடைத்தேர்தல் மூலம் மேயராக வந்தவர், ராஜ்குமார். இவர்களின் ஆட்சியில் கோவை மாநகராட்சி வளர்ச்சி கண்டதா?

பரிதாப நிலையில் புறநகர்ப் பகுதிகள்

கோவை மாநகராட்சியுடன் மூன்று நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு, கோவை மாநகரம் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஐந்து ஆண்டுகளில், புறநகர்ப் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு கூடியதைத் தவிர, வேறு எந்த முன்னேற்றமும் இல்லை. விதிவிலக்காக அமைச்சர் வேலுமணியின் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு மண்டலப் பகுதிகளில் மட்டும் அனைத்து வேலைகளும் நடந்து முடிந்துள்ளன.

மேம்பாலத் திட்டத்தை மாற்றியமைத்த ‘டீல்’

‘‘2007-2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டம், ஒன்பது ஆண்டுகளாகியும் இன்று வரை நிறைவேற்றப் படவில்லை. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காகத் தோண்டப்பட்ட சாலைகள்கூட சீரமைக்கப்படாமல் கிடப்பதுதான் பரிதாபம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்