ராமேஸ்வர நகராட்சி அலங்கோலக் காட்சி!

உள்ளாட்சி

ராமேஸ்வரம் சென்று வந்தால் தங்கள் பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை. ராமேஸ்வரம் நகராட்சி மக்களுக்கு மட்டும் இன்னும் பாவ விமோசனம் கிடைக்கவில்லை.

‘‘நகராட்சி சேர்மன் அர்ச்சுனன், ராமேஸ்வரம் அ.தி.மு.க-வின் தனிப்பெரும் அடையாளமாக உலாவருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் பல கோடிகளுக்கும் அதிபதியாகியுள்ளார். புனிதத் தலமாக ராமேஸ்வரம் திகழ்வதால் மத்திய மாநில அரசுகள் வளர்ச்சி திட்டங்களுக்காகக் கோடி கோடியாகக் கொட்டியது. ஆனால், ஊர் வளர்ச்சி பெறவில்லை மாறாக அர்ச்சுனனும் அவரை சார்ந்தவர்களும்தான் வளர்ந்தார்கள்.’’ என குற்றச்சாட்டு படிக்கிறார் சி.பி.எம். தாலுகா செயலாளர் செந்தில்வேல். ‘‘கோயில் நகரத்தில் வசிக்கும் மக்கள் சாக்கடைகளுக்கும், குப்பைகளுக்கும் மத்தியில்தான் வாழும் நிலை உள்ளது. இதற்கு முழு முதற் காரணம் ராமேஸ்வரம் நகராட்சியில் நடக்கும் முறைகேடுகள்தான். கடலோர மேலாண்மை சட்டத்தின் கீழ் ராமேஸ்வரம் பாதுகாப்பு மண்டலத்துக்குட்பட்ட பகுதியாகும். இதனால் கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் வீடுகளோ, கட்டடங்களோ கட்ட அனுமதி கிடையாது. இதெல்லாம் சாதாரண மீனவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். கார்பரேட் நிறுவனங்களின் ஹோட்டல்களும், தங்கும் விடுதிகளும் கடற்கரை பகுதிகளில் கட்ட எந்தத் தடையும் இல்லை. நகராட்சி தலைவர் உள்ளிட்டவர்களுக்கு தேவையான தொகையை கொடுத்துவிட்டால் 5 மாடி கட்டடம்கூட கட்டிக்கொள்ளலாம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இங்கு போதுமான சுகாதார அடிப்படை வசதிகள் ஏதுமில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்