ஜெ.வைச் சுற்றி 27 டாக்டர்கள்!

காம்ப்ளிகேட்டட்?கவர் ஸ்டோரி

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் பிரதான துறைகள்:

தொற்றுநோய்

கிரிட்டிகல்/ இன்டன்சிவ் கேர்

சர்க்கரை நோய்

நுரையீரல்

இதயம்

இவை தவிர, டயட், பிசியோதெரப்பி பயிற்சி நிபுணர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. இந்த ஒரு மாத காலமாக, முதல்வரின் உடல்நிலை பற்றிய அரசின் குரலாக அப்போலோ மட்டுமே ஒலித்துவருகிறது. ஜெ.க்கு என்ன வகையான நோய் அறிகுறிகள் இருக்கின்றன, என்ன மாதிரியான சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன, அவரது உடல்நிலை பற்றி விவாதித்து சிகிச்சை முறைகளை முடிவுசெய்யும் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர் குழுக்கள் பற்றிய தகவல்களை அறிக்கைகள் வழியாக அப்போலோதான் வெளியிட்டு வந்தது. அதுவும், 10 நாட்களாக அறிக்கை எதுவும் தரவில்லை. ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கக் காரணமாக இருந்தது டாக்டர் சிவக்குமார். ஜெயலலிதாவுக்கு, நுரையீரல் நிபுணர் நரசிம்மன், சர்க்கரை நோய் நிபுணர் சாந்தாராம் உள்ளிட்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு, லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் மருத்துவர் குழு என தொடர்ந்து நிபுணர் குழுவை மாற்றிவருகின்றனர். தற்போது ஜெயலலிதாவை தன் மருத்துவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிபுணர் குழுவினர் யார்? யார்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்