மிஸ்டர் கழுகு : 45 நிமிஷம் உள்ளேயே இருக்கணும்!

‘‘ஜெயலலிதா நலம் பெற்றுவிட்டார்... 27-ம் தேதி வீடு திரும்புகிறார்... என்றெல்லாம் செய்திகள் வருகிறதே?” - கழுகாரைப் பார்த்ததும் கேள்வியைப் போட்டோம்.

‘‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, அப்போலோவில் இருந்து வெளிவரும் அறிக்கைகள் முற்றிலும் நின்றுவிட்டன. ‘முதலமைச்சரின் உடல்நிலை முன்னேறி வருகிறது’ என கடைசியாக கடந்த 10-ம் தேதி அறிக்கை வந்தது. அதன்பிறகு, 10 நாட்கள் ஆகியும் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. அரசுத் தரப்பில் இருந்து இதுவரையில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. ‘முதல்வர் நலம்பெற்றுவிட்டார்... இரண்டு நாளில் வீடு திரும்புவார்’ என்று அ.தி.மு.க. நிர்வாகிகள்தான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். ஜெயலலிதாவின் உடல்நிலையில் இறக்கமும் இல்லை; முன்னேற்றமும் இல்லை. அவர் சிகிச்சைக்கு சேர்ந்தபோது, என்னவிதமான உபாதைகளோடு அவதிப்பட்டாரோ அதே நிலைதான் தற்போதும் நீடிக்கிறது. செயற்கைச் சுவாசம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் செயற்கை சுவாசத்தில் இருப்பதே மிகவும் அபாயகரமான நிலையைத்தான் சொல்லாமல் சொல்கின்றன. அப்போலோ மருத்துவமனையின் மௌனமும், ஆட்சி நிர்வாக மூவ்மென்டுகளும் அதைத்தான் உறுதிசெய்கின்றன.”

‘‘லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் அப்போலோவில் இருந்து சென்றுவிட்டார்களே?”

‘‘லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் 23-ம் தேதி மீண்டும் வருகிறார். ஆனால், எய்ம்ஸ் டாக்டர்களின் பணி முடிவடைந்துவிட்டது. அவர்கள் இனிமேல் வரமாட்டார்களாம். டெல்லி ஊடகங்கள் இப்போது, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் த்ரிகா, நிதிஷ் நாயக்கைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல், ‘இதற்குமேல் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றங்களைக் கொண்டுவர வேண்டுமானால், அதற்கானக் கருவிகள் வேண்டும். இங்கிருப்பவை போதுமானவை அல்ல. அதனால், வாய்ப்பிருந்தால், லண்டனுக்கு ஜெயலலிதாவை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைப் பற்றி யோசியுங்கள்’ என்றும் தெரிவித்துள்ளாராம், லண்டன் செல்வது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. தேவைப்பட்டால், தீபாவளிக்குப் பிறகு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படலாம் எனவும் அல்லது வீட்டில் வைத்துப் பார்க்கலாம் என்றும் சொல்லப்​படுகிறது!”

‘‘பிரதமர் மோடி ஏன் வரவில்லை?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்