நாராயணசாமி ஜெயிப்பாரா? நெல்லித்தோப்பு ‘நச்’ ரிப்போர்ட்!

தேர்தல்

ஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நடக்கப் போகும் தேர்தலில் இருந்து முற்றிலும் வேறுபட்டது புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல். நெல்லித்தோப்பு இடைத்தேர்தல், தனி மனித பதவி மோகத்தினால் மக்களின் மீது திணிக்கப்பட்ட ஒன்று.

கடந்த மே மாதம் நடந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் போட்டியிடாத முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி முதல்வராகப் பதவியேற்றார். ஆறு மாதங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது விதிமுறை. எனவே, நெல்லித்தோப்பு தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். தனது  எம்.எல்.ஏ பதவியை நாராயணசாமிக்காக ராஜினாமா செய்தவர், ஜான்குமார். தி.மு.க-வில் இருந்தபோது, எம்.எல்.ஏ  ஆகவேண்டும் என்ற கனவில்,  தொகுதியில் இலவசங்களை வாரி வழங்கினார், ஜான்குமார். அவரை கருவேப்பிலையாக மட்டுமே தி.மு.க பயன்படுத்திக் கொண்டது. அதனால் மனமுடைந்த ஜான்குமார், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2016 தேர்தலில் எம்.எல்.ஏ ஆனார். அந்தப் பதவியை நாராயணசாமிக்காக ராஜினாமா செய்துள்ளார்.

நெல்லித்தோப்பு, தி.மு.க-வின் பாரம்பர்யமிக்க தொகுதி. அங்கு, காங்கிரஸ் ஆதரவாளர்களைப் பார்ப்பது சிரமம். 1980 முதல் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்ற தி.மு.க., 2006-ல் அ.தி.மு.க-விடம் வெற்றியைப் பறிகொடுத்தது. 2011-ல் தி.மு.க சார்பில் ஜான்குமாரை நிறுத்தியிருந்தால் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம் என்ற நிலையில், உட்கட்சிப் பூசலால் அவரை வேறு தொகுதிக்கு மாற்றியடித்தனர். அதனால், இரு தொகுதியிலும் தி.மு.க மண்ணைக் கவ்வியது. இந்த விரக்தியில் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினார் ஜான்குமார். அத்துடன், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தனித்துப் போட்டியிட்ட நாராயணசாமிக்கு நெல்லித்தோப்பு தொகுதியில் மட்டும் 11,844 வாக்குகள் வாங்கிக் கொடுத்தார், ஜான்குமார். 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜான்குமார், அ.தி.மு.க வேட்பாளர் ஓம்சக்தி சேகரை 12,141 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்