காவிரி... தொழில் நுட்பக் குழுவின் துரோகப் பட்டியல்!

போராட்டம்

காவிரி நதிநீர் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் தற்போதைய நீர் இருப்பு, நீர் தேவை உள்ளிட்டவை தொடர்பான உண்மை நிலையை ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் அமைக்கப்பட்ட காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழு நேரில் ஆய்வு மேற்கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ‘இந்தக் குழு, நேர்மையாக நடந்து கொள்ளவில்லை, தமிழ்நாட்டுக்கு பல பாதகங்களை இழைத்துள்ளது’ என ஆதங்கக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.  

பாதகங்களின் பட்டியல்

மாண்டியாவில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய பணத்தைக் கொடுக்காததுபோன்ற காரணங்களாலேயே அங்கு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால், அவர்கள் வறட்சியால் தற்கொலை செய்துகொண்டதாக ஆய்வுக் குழு சொல்கிறது.

தமிழகத்தில், 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். ஆனால், இந்தத் தகவலை ஆய்வுக்குழு பதிவு செய்யவே இல்லை.

கர்நாடகம், காவிரி நீரை தராததால் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடக்கவில்லை. இதனால், இங்குள்ள விவசாயிகளுக்கு வாழ்வாதார இழப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நடப்பு ஆண்டில் ஏற்பட்டுள்ள 4 லட்சம் ஏக்கர் குறுவை இழப்பையாவது ஆய்வுக் குழு அறிக்கையில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.

கர்நாடகாவில் 4.27 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு 36.38 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுவதாக ஆய்வுக் குழு சொல்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 4.25  லட்சம் ஏக்கரில் கருகிக் கொண்டிருக்கும் சம்பா பயிர்கள் குறித்து ஆய்வுக் குழு கொஞ்சமும் கவலைப்படவில்லை. சுமார் 5 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி ஆரம்ப நிலையிலேயே கைவிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை எல்லாம் ஆய்வுக் குழு மறைத்து விட்டது.

தற்போது சம்பா சாகுபடிக்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என ஆய்வுக் குழு பரிந்துரைக்கவில்லை. இதை, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், கர்நாடகாவுக்குச் சாதகமாக உச்ச நீதி மன்றத்தில் எடுத்துரைத்தார். இதனால்தான் ஏற்கனவே உத்தரவிடப்பட்ட 2 ஆயிரம் டி.எம்.சி நீரையே திறந்துவிடச் சொல்லி, அக்டோபர் 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாட்டின் காவிரி டெல்டா மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளை ஆய்வுக் குழு பார்வையிடவே இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்