மிஸ்டர் மியாவ்

தமன்னா தடபுடல்

சிறு இடைவேளைக்குப்பின், தமன்னாவின் ரீஎன்ட்ரியால் கோடம்பாக்கத்தில் பலர் குளிர்ந்துபோயிருக்கிறார்கள். நடிப்பு, டான்ஸ் என திறமைமிகுந்த தமன்னா, ‘தேவி’, ‘தர்மதுரை’ படங்கள் மூலம் பாராட்டுக்களை அள்ளியிருக்கிறார். இப்போது, பெரிய சம்பளம் வாங்கும் நயன்தாராவுக்குப் போட்டியாக யாரும் இல்லை என்ற நிலைமை, தமன்னா வரவால் மாறியிருக்கிறது. ‘பாகுபலி - 2’, விஷாலுடன் ‘கத்தி சண்டை’, சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என தீபாவளிக்குப் பிந்தைய ரிலீஸுக்கு வரிசைகட்டி நிற்கின்றன தமன்னா படங்கள்.   

நயன்தாரா டிமிக்கி

யன்தாராவைச் சுற்றிலும் ஆயிரத்தெட்டு கிசுகிசுக்கள் றெக்கைக்கட்டிப் பறக்கின்றன. ஆனாலும், அவரது சினிமா மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே போகிறது. சினிமா படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் பங்சுவாலிட்டியாக ஆஜராவதில் நயன் கில்லாடி. ஆனால், வெங்கடேஷுடன் நடிக்கும் ‘பாபு பங்காரம்’ படப்பிடிப்புக்கு வராமல்  டிமிக்கி கொடுக்க... கொந்தளித்துப்போன படக்குழு, அக்கட பூமி கவுன்சிலில் அம்மணி மீது புகார் பட்டியல் வாசித்து இருக்கிறது.   

‘செக்ஸி’ ஐஸ்வர்யா

திருமணமே நடக்காத ஐஸ்வர்யா ராஜேஷ், இம்மியளவுகூட இமேஜ் பார்க்காமல், ‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்தார். புகழும், பாராட்டும் போதுமா? துட்டு வேண்டாமா? ‘இனிமேல் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்க மாட்டேன். போதும் போதும்னு இயக்குநர் சொல்ற அளவுக்கு செக்ஸியா நடிப்பேன்’ என அறிக்கை விடுத்துள்ளார் ஐஸு.

பெண்டு கழன்ற ராய் லட்சுமி

டிகர் சிரஞ்சீவிக்கு ராகவா லாரன்ஸ் டான்ஸ் மீது அலாதியான பிரியம். தன் படங்களில் மறக்காமல் லாரன்ஸுக்கு சான்ஸ் கொடுப்பது சிரஞ்சீவியின் வழக்கம். சிரஞ்சீவியின் 150-வது படமான ‘கத்தி’ தெலுங்கு ரீ-மேக் படத்தின் ஓப்பனிங் பாடல் காட்சியின் டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ்தான். சிரஞ்சீவியுடன் சேர்ந்து நடனமாடும் ராய் லட்சுமிக்கு ஒரு வாரம் ரிகர்சல். அம்மணிக்கு பெண்டு கழன்றுவிட்டதாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்