நாற்றம்... நச்சு... நாகர்கோவில் நகராட்சி!

அவலம்

டந்த உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி. கைப்பற்றிய இரண்டு நகராட்சிகளில் நாகர்கோவிலும் ஒன்று. நகராட்சி தலைவியாக மீனாதேவ் இருக்கிறார். நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்ந்தெடுப் பில் தி.மு.க கவுன்சிலர் அ.தி.மு.க அணிக்கும், அ.தி.மு.க கவுன்சிலர் தி.மு.க அணிக்கும், காங்கிரஸ் கவுன்சிலர்கள் பி.ஜே.பி மற்றும் அ.தி.மு.க அணிக்கும் வாக்களித்த வேடிக்கையும் நாகர்கோவிலில் நடந்தது.

‘‘நாடாளுமன்ற தேர்தலில் இங்கு பிரசாரத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா நாகர்கோவிலை மாநகராட்சியாக மாற்றுவேன் என்றார். ஆனால், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் 10 நகராட்சி கமிஷனர்கள், 5 முதன்மை பொறியாளர்கள் மாற்றப் பட்டதும் இங்கேதான். இந்த நகராட்சியை பொறுத்தவரை மொத்தம் உள்ள 52 வார்டுகளில் 25 வார்டுகளில் துப்புரவுப் பணியாளர்களைக்  கொண்டு குப்பைகளை அகற்றி வருகின்றனர். மற்ற வார்டுகளில் தனியார் மூலமாகக் குப்பைகளை அகற்றுகிறார்கள். போதிய துப்புரவுப் பணியாளர்கள் இல்லாமல், கழிவுகளை அகற்றும் பணி நடப்பதால் நகராட்சி பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளன. இதனால் கண் எரிச்சல் ஏற்படுவதோடு துர்நாற்றமும் வீசுகிறது. மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளக் கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பை மீறி சாக்கடையில் நகராட்சி ஊழியர்களை இறக்கி கழிவுகளை அகற்றவைக்கும் பரிதாபம் நாகர்கோவில் நகராட்சியில்தான் நடக்கிறது.

நகராட்சியில் குப்பை சேகரிக்கும் தனியார் நிறுவனம் மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து வழங்க வேண்டும். ஆனால், கடந்த மூன்று வருடங்களாக அந்த நடைமுறை பின்பற்றப் படவில்லை. வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் பயோ காஸ் திட்டத்துக்கு தினமும் ஐந்து டன் காய்கறி கழிவுகள் தேவை இருந்தும் குப்பைகள் பிரித்து வழங்கப்படவில்லை. வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பாதாள சாக்கடை திட்டத்துக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய இருப்பதாகக் கூறப்பட்டது அதுவும் இன்னும் வரவில்லை. குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் என்ன நிலையில் இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்