கழுகார் பதில்கள்

பொன்விழி, அன்னூர்.

ஜெயலலிதாவின் உடல் நலனை விசாரிக்க விஜயகாந்த் செல்லாதது ஏன்?

விஜயகாந்தின் உடல்நலன் குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்திலும், ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது எம்.ஜி.ஆர்’ இதழிலும் பல நேரங்களில் தரம் குறைந்த விமர்சனங்கள் செய்யப்பட்டன. அந்தக் கோபத்தில் விஜய காந்த் இப்படி நடந்துகொண்டு இருக்கலாம்.

மேலும் தான் சென்றால் யாரும் ஏதாவது அந்த இடத்தில் அசம்பாவிதமாக நடந்துகொண்டு விடக்கூடாது என்று பயமும் விஜயகாந்துக்கு இருந்திருக்கலாம். அப்போலோவுக்கு ஸ்டாலின் வந்து மருத்துவமனைக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து பேட்டி தரும்போது சிலர், ‘புரட்சித் தலைவி வாழ்க’ என்று சப்தம் எழுப்பி உள்ளார்கள். இதெல்லாம் அந்த இடத்தில் தேவையில்லை. இப்படி ஏதாவது நடந்து விடக்கூடாது என்பதால்தான், ‘அப்போலோ போகும்போது இரண்டு மூன்று முன்னாள் அமைச்சர்களை உடன் அழைத்துச் செல்’ என்று ஸ்டாலினிடம் கருணாநிதி முன்னெச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளார். இத்தகைய வெளிப்புற சூழ்நிலைகளும் விஜயகாந்தை தடுத்திருக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்