‘‘எம்.ஜி.ஆருக்குச் சொன்னோம் ஜெயலலிதாவுக்குச் சொல்ல முடியவில்லை!’’

ஹண்டே சொல்லும் ரகசியம்!பேட்டி

எம்.ஜி.ஆர் அப்போலோவில் அனுமதிக்கப் பட்ட​போது, எம்.ஜி.ஆர் உடல்நிலை குறித்து செய்தியாளர் களிடம் விளக்கியவர் அப்போதைய அமைச்சர் ஹண்டே. இப்போது அதே அப்போ​லோவில் “ஜெயலலிதா உடல்நிலை குணமடைந்து வருகிறது. விரைவில் வீடு திரும்புவார்” என்று சொல்லியதும் இதே ஹண்டே தான்.

அவரிடம் பேசினோம்.

‘‘எம்.ஜி.ஆரின் பக்கவாதம் பிசியோதெரபி சிகிச்சையில் முன்னேற்றம் அடைந்தது போல் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சொல்லியுள்ளீர்களே?’’

‘‘ஜெயலலிதாவுக்கு இருப்பது நுரையீரல் நோய் தொற்றுதான். ஆனால், எம்.ஜி.ஆருக்கு மூளையில் ரத்தம் கட்டியதால், அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டு அதற்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு நுரையீரலில் சளிகள் உறைந்து மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நுரையீரல் தொற்றைச் சரி செய்வதில் சிறப்பு நிபுணர்தான் ரிச்சர்ட் பியெல். இருமல் வந்தால்தான் சளி வெளியேறும். இருமலை வரவைப்பதற்கு பிசியோதெரபி தேவை. இந்த சிகிச்சை அளிக்கத்தான் சிங்கப்பூரில் இருந்து, இரண்டு மருத்துவர்கள் வந்துள்ளார்கள். அவர்கள் முதுகு மற்றும் தோள்பட்டையில் சிகிச்சை மேற்கொண்டதால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நான் மருத்துவர்களிடம் பேசியபோது அது தெரிந்தது. அதனால்தான் சீக்கிரம் வீடு திரும்பும் வாய்ப்புள்ளது என்றேன்.’’

‘‘ஒரு மருத்துவராக ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘தொற்றுக் கிருமியால் அவருக்குத் தாக்கம் உள்ளது. தொற்றுக் கிருமிகள் தொற்றக் கூடாது என்பதற்காகத் தான் அவரைப் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. கண்டிப்பாக அனுமதிக்கவும் கூடாது. தொற்றுக் கிருமியின் தாக்கத்தால் ஆரம்பத்தில் சுய நினைவுகூட இல்லாமல் இருந்து இருக்கலாம். காய்ச்சல் அதிகமாக இருந்திருக்கும். தொற்றுக் கிருமியைப் போக்க எந்த சிகிச்சை அளிக்க வேண்டுமோ அதை இப்போது அளித்து வருகிறார்கள். மருத்துவமனையில் இருந்து அவர் வெளியே வந்தாலும், முழுமையாக அவர் செயல்பாட்டுக்கு வர கொஞ்ச நாட்கள் ஆகும்.’’

‘‘எம்.ஜி.ஆர். அப்போலோவில் இருந்ததற்கும், இப்போது ஜெயலலிதா அப்போலோவில் இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?’’

‘‘எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்டபோதும் எல்லோரையும் அவர் அறைக்குள் பார்க்க அனுமதித்தது கிடையாது. மூன்று பேர் ஷிப்ட் முறையில் வாசலில் உட்கார்ந்து இருப்போம்.  வருபவர்களிடம் நாங்களே பதில் சொல்லி அனுப்பிவிடுவோம். அதற்குக் காரணம் அவருக்கும் தொற்றுக்கிருமிகள் பாதிப்பு இருந்தது. ஆனால், யார் வந்தாலும், அந்தத் தகவலை எம்.ஜி.ஆரிடம் மறக்காமல் சொல்லிவிடுவோம். இவ்வளவு நெருக்கடிகள் அப்போது கிடையாது.’’

‘‘எம்.ஜி.ஆருக்கு என்ன பிரச்னை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இப்போது எதுவுமே முழுமையாக சொல்லவில்லையே?’’

‘‘எம்.ஜி.ஆர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட​போது, அவருக்கு கிட்னி பிரச்னை இருந்தது. முதல் நாள் எங்களோடு நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார். அதற்கு மறுதினம் சட்டசபை கூட்டம் நடைபெற இருந்தது. கூட்டத்தில் என்ன பேசவேண்டும் என்பதையும் அவர் எங்களுக்கு சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்