கீழடி... குழப்படி! - மீண்டும் புதைக்கப்படும் தமிழர் நாகரிகம்?

அலட்சியம்

சிவகங்கை மாவட்டம் கீழடியில், சங்க காலப் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படும் நகரம் ஒன்று அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. ‘அங்கு தோண்டப்பட்ட குழிகளை மூடுகிறார்கள்’ என சமீபத்தில் செய்தி பரவ... மதுரை, சிவகங்கை வட்டாரங்கள் பரபரத்தன. 

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பெங்களூரு அருங்காட்சியகத்துக்குக் கொண்டுசெல்வது என்று முடிவுசெய்யப்பட்டது. ஆனால், அதற்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மேலும், “கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களை வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்லக் கூடாது. ஏற்கெனவே கொண்டு செல்லப்பட்ட பல அரிய பொருட்கள் தமிழகத்துக்குத் திரும்ப வரவில்லை. எனவே, கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைத்து, மாணவர்களும், பொதுமக்களும் நம் முன்னோர்களின் நாகரிகத்தைத் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யவேண்டும். கீழடியில் ஆய்வுகள் தொடர தமிழக அரசு தேவைப்படும் நிலங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்’ என்று வைகோ, கி.வீரமணி, ராமதாஸ், பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டனர். ஜி.ராமகிருஷ்ணன், சீமான் ஆகியோர் கீழடிக்கு நேரடியாக  வருகை தந்து பரபரப்பைக் கிளப்பினார்கள்.

இந்த நிலையில்தான், இந்தப் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பாலசுப்பிரமணியம், “கீழடியில் கிடைக்கும் தொல்லியல் பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கும், அவற்றை எதிர்காலத் தமிழ் சமூகத்தினர் அறிவதற்கும் ஓர் ஆய்வகத்தை அமைக்க வேண்டும்; அதற்கு இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுக்கவேண்டும்” என்று தமிழக அரசுக்குக்குக் கடிதம் எழுதினார். அதற்குப் பதில் இல்லை. பிறகு அவர், 16.09.2016-ல் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். உடனே, இவரது கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவு வந்துள்ளது. அதன் பின்னர்தான், ஆய்வகம் அமைக்கத் தேவையான நிலத்தை மாவட்ட நிர்வாகம் தேட ஆரம்பித்தது.

அதே நேரம், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழிமதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், “கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து தொல்பொருட்களைப் பாதுகாக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார். அதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், ஆய்வுசெய்த குழிகளை மூடக்கூடாது என்றதுடன், தொல்பொருட்களை மைசூர் கொண்டு செல்வதற்கு இடைக்காலத் தடை விதித்தது. நீதிமன்ற தடையால், தோண்டிய குழிகளை மூட முடியாமலும், மேலே எடுத்து வைத்திருக்கிற பொருட்களை ஆய்வுக்குக் கொண்டுசெல்ல முடியாமலும் தொல்லியல் குழுவினர் மிகவும் சிரமப்பட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்