படிச்சது பத்தாம் வகுப்பு... பிடிச்சது கருக்கலைப்பு!

கதிகலங்கவைத்த கருக்கலைப்பு ஸ்பெஷலிஸ்ட்!கொடுமை

ள்ளிப்பால் ஊற்றி பெண் குழந்தைகளை கொன்ற காலம் போய், கருவிலேயே பெண் குழந்தையா என பார்த்து அழிக்கும் கொடூரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது.

ஆண்டுக் கணக்கில் இயங்கி வந்த ஸ்கேன் சென்டரில் ஆயிரக்கணக்கான சிசுக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

திருவண்ணாமலை செங் குட்டுவன் தெருவைச் சேர்ந்த ஆனந்தி, அனுமதியின்றி ஸ்கேன் சென்டர் நடத்துவதாகவும், கருவில் இருப்பது பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்வதாகவும் புகார் எழ... திருவண்ணாமலை மருத்துவ இணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமையிலான குழு ஸ்கேன் சென்டரை அதிரடி சோதனை போட்டது. ஆனந்தியையும் போலீஸ் வளைத்தது.

போலி ஸ்கேன் சென்டர் உள்ள ஏரியாவில் விசாரித் தோம். “ஆனந்தி 10-ம் வகுப்பில் ஃபெயில் ஆனவர். சில டாக்டர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அங்கே கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் எடுக்கறது எப்படி? கருவில இருக்கற குழந்தை ஆணா, பெண்ணான்னு கண்டுபிடிக்கறது எப்படி? கருக்கலைப்பு எப்படி செய்கிறார்கள் என்பதை எல்லாம் கற்றுக்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்