7 ரூபாய் to 15 ஆயிரம் கோடி!

பச்சமுத்து... பாரிவேந்தர்...

30 ஆண்டுகளுக்கு முன்பு, சொந்த கிராமமான சேலம் தாண்டவராய​புரத்தில் இருந்து வெறும் ஏழு ரூபாயுடன் சென்னைக்கு வந்தார் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரான பச்சமுத்து என்ற பாரிவேந்தர். இப்போது அவர், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதி. 130 நாடுகளில் தொழில் சாம்ராஜ்ஜியம் நடத்தும் பச்சமுத்து, வெறும் 72 கோடி ரூபாய் புகாரில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் என்ற குக்கிராமம்தான், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவின் சொந்த ஊர். தயார் வள்ளியம்மை. தந்தை ராமசாமி. ஆத்தூர் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த பச்சமுத்து, திருச்சியில் இயற்பியல் பாடத்தில் இளங்கலை பட்டம் முடித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில், கணிதத்தில் முதுகலையும் படித்தார். டுடோரியல் கல்லூரிகள் மற்றும் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கணித ஆசிரியராக பகுதிநேர வேலை செய்தார்.

திருப்புமுனை...

சில கிறிஸ்தவ மிஷனரிப் பள்ளிகளைத் தவிர, முறையாக ஆங்கிலம் கற்றுத்தர வேறு பள்ளிகள் இல்லை என்பதை உணர்ந்த பச்சமுத்து, சென்னை மேற்கு மாம்பலத்தில் நைட்டிங்கேல் நர்சரி பள்ளியை ஆரம்பித்தார். 25 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அந்தப் பள்ளி, 12 ஆண்டு களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்ந்தது. அந்த நேரத்தில், தமிழகத்தில் கல்லூரிகள் நடத்தும் பொறுப்பை தனியார்களிடம் ஒப்படைத்தது, எம்.ஜி.ஆர் அரசு. அதில் ஜாக்பாட் அடித்தது பச்சமுத்து வுக்கு. 1984-ம் ஆண்டு பாலிடெக் னிக், 1985-ல் இன்ஜினீயரிங் கல்லூரி என திறந்தார். பிறகு, பச்சமுத்துவின் வளர்ச்சி அசுர வேகம் எடுத்தது. 1990-களின் தொடத்தில், தன் தந்தை ராமசாமியின் பெயரில், ஸ்ரீராமசாமி நினைவாக (Sri Ramasamy Memorial) எஸ்.ஆர்.எம் குழுமத்தை உருவாக் கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்