மிஸ்டர் கழுகு : கார்டன் கல்யாணம்... கலங்கிய ‘தங்கத் தம்பி’!

 

“வளர்ப்பு மகன் திருமணத்தால் எழுந்த சர்ச்சையாலோ, என்னவோ... தன் தோளில் தூக்கி வளர்த்த விவேக் திருமணத்துக்கு வருவதை தவிர்த்துவிட்டார் முதல்வர்” என்றபடியே வந்தார் கழுகார்.

“சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி. அவருடைய மகன் விவேக். ஜாஸ் சினிமாஸ் நிர்வாக இயக்குநர். விவேக் என்றால் ஜெயலலிதாவுக்கு செல்லம். ‘என் வீட்டு கல்யாணமாக, விவேக் கல்யாணத்தை நடத்த​வேண்டும்’ என ஜெ சொன்ன பிறகுதான் விவேக்குக்குப் பெண் பார்க்கும் படலம் கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பித்தது. கார்டனின் அதிகார மையமாக உருவாகியிருந்த விவேக்கிற்கு மனைவியாகப் போகிற பெண் என்றால், சும்மாவா? திவாகரனின் கண் அசைவில்தான் பெண் பார்க்கும் படலமே நடந்தது. மதுரையில் இருந்து திவாகரனுக்கு நெருக்கமான நபர் மூலம்தான், கல்யாணஓடை பாஸ்கரன் மகளைப் பார்த்துள்ளார்கள். விவேக்குக்குப் பிடித்துவிட்டது. அதற்குள் பெண்ணின் தந்தை பாஸ்கரன் மீ்து செம்மரக் கடத்தல் விவகாரம் இருக்கிறது என கார்டனுக்கு தகவல் எட்டியது. ‘சிக்கலான இடத்தில் பெண் எடுக்க வேண்டாம்’ என நினைத்தார்கள். ஆனால், விவேக்கின் பிடிவாதம் காரணமாக இந்தத் திருமணம் உறுதியானது. ஆகஸ்ட் 29-ம் தேதி நாள் குறிக்கப்பட்டது. அப்போதே திருமணத்துக்கு தான் வரமுடியாது என்பதை விவேக்கிடமே சொல்லிவிட்டாராம், ஜெ.

‘‘ம்!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்