"வெங்காயம், பூண்டு விலை ஏறிவிட்டது..."

"அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது!" போட்டி சட்டசபைகள் ஃபிளாஸ்பேக்

‘நமக்கு நாமே’ விவகாரத்தில் ஸ்டாலின் உட்பட தி.மு.க-வினர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட பிறகு கோட்டையில் தி.மு.க. நடத்திய போட்டி சட்டசபை நையாண்டி தர்பாராக மாறியது. நாற்காலிகள், கார்ட்லஸ் மைக், ஸ்பீக்கர், பெல் என சட்டசபை சங்கதிகளோடு அரங்கேறிய போட்டி சட்டசபை, சேனல்களில் லைவ் ஆக... ஆளும் கட்சிக்கு ஏகக் கடுப்பு. அதன் எதிரொலிதான் கோட்டைக்கு இரும்புத்திரை போடப்பட்டது. இதெல்லாம் இருக்கட்டும். ‘போட்டி சட்டசபைகள்’ நடப்பது ஒன்றும் புதிதில்லை. 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியிலும் 2006-2011 தி.மு.க. ஆட்சியிலும் அரங்கேறிய போட்டி சட்டசபைகளின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளின் ரீவைண்ட் ஸ்டோரி இங்கே. முதலில் 2001-2006 அ.தி.மு.க. ஆட்சி.

2005 மார்ச் 9

110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிக்கை ஒன்றை வாசித்தார் முதல்வர் ஜெயலலிதா. ‘‘சென்னையின் அழகை சீர்குலைக்கும் முயற்சிகளை எனது அரசு சகித்துக்கொள்ளாது. ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜின் விளம்பர நிறுவன ஊழியர்கள் அரசுக்குச் சொந்தமான மரத்தை சட்டவிரோதமாக வெட்டியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது’’ என்றார்.

ஆற்காடு வீராசாமி விளக்கம் அளிக்க முயன்றார். சபாநாயகர் காளிமுத்து, ‘‘110-வது விதியில் விவாதம் கிடையாது’’ என மறுத்ததால் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் எழுந்து கூச்சல் எழுப்பியதால் சட்டசபை அமளி துமளியானது. பொன்முடி, ப.ரங்கநாதன், பரிதி இளம்வழுதி ஆகியோரை வெளியேற்ற காளிமுத்து உத்தரவிட்டார். இதனை மற்ற தி.மு.க-வினர் தடுத்ததால் அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். காளிமுத்துவுக்கு எதிராக பரிதியும் திருவாரூர் அசோகனும் கடுமையாகக் குரல் கொடுத்தனர். வெளியேற்றப்பட்டவர்கள் வராண்டாவில் படுத்துக் கொண்டும் போராடியதால் அவர்களைத் தூக்கிக் கொண்டு சபைக் காவலர்கள் வெளியே விட்டனர். இதனை எதிர்த்து பா.ம.க., சி.பி.எம்., சி.பி.ஐ., காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்தனர். எதிர்க் கட்சியினர் அனைவரும் கோட்டைக்கு எதிரே சாலையில் அமர்ந்து போராடியதால் போக்குவரத்துத் தடைப்பட்டது. அப்போது இணைக் கமிஷனராக இருந்த சைலேந்திர பாபு, துரைமுருகனிடம் வந்து ‘‘சார்.. மறியலை கைவிடுங்கள். மறுத்தால் எல்லோரையும் கைது செய்வோம்’’ என்றார். ஆனால், கைது செய்யவில்லை. கிடுகிடு போராட்டத்தால் கடற்கரைச் சாலையே வெறிச்சோடியது. ‘‘அடிக்காதே... அடிக்காதே... ஜால்ரா அடிக்காதே! மீறாதே... மீறாதே... மரபை மீறாதே!’’ என கோஷமிட்டபடியே இருந்தனர்.

பிறகு, சாலையிலேயே போட்டி சட்டசபையை நடத்தினார்கள். சபாநாயராக துரைமுருகன் ஆக்டிங் கொடுத்தார். ‘‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல... இருக்கையில் உட்கார்ந்தும் உட்காராத சபாநாயகர்’’ என பாடியபடியே காளிமுத்து எப்படி நாற்காலியில் அமர்வார் என தனக்கே உரிய மேனேரிசத்துடன் துரைமுருகன் மோனோ ஆக்டிங் செய்து காட்டிய போது சுற்றியிருந்தவர்கள் எல்லாம் ரசித்தார்கள். முதல்வர் வரும்போது காளிமுத்து எப்படி நடந்து கொள்வார் என அப்படியே இமிடேட் செய்து காட்டினார். ‘ஜால்ரா’ சாதனங்களை எல்லாம் தயாராக வைத்துக்கொண்டு ‘ஜிங் சக்’ என சத்தமிட்டப்​படி கலகல கலாட்டாக்களை அரங்கேற்றினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்