தூக்கி அடிக்கப்பட்ட மனோகரன்!

திருச்சி அ.தி.மு.க.வில் குஷிகோஷ்டி

முதல்வர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்த மனோகரன், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார்.

திருச்சி மாநகர் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பதவியில் எட்டு ஆண்டுகளாக கோலோச்சிய மனோகரனை கழற்றிவிட்டு அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை நியமித்திருக்கிறார் ஜெயலலிதா. திருச்சி மாவட்ட அரசியலில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த சிவபதி, பூனாட்சி, கே.கே.பாலசுப்ரமணியன், பரஞ்சோதி, கு.ப.கிருஷ்ணன் போன்றவர்கள்கூட, மனோகரனின் அரசியலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓய்ந்துபோனார்கள். அப்படிப்பட்டவரே, இப்போது ஓரம் கட்டப்பட்டிருக்கிறார்.

மாவட்டச் செயலாளர் மாற்றப்பட்டால், தலைமையின் உத்தரவுக்குக் கீழ்படிந்து, புதிய மாவட்டச் செயலாளரை சந்தித்து வாழ்த்துத் தெரிவிப்பது அ.தி.மு.க-வில் பொதுவான வழக்கம். ஆனால், நடராஜனை, ஒப்புக்காகக்கூட மனோகரன் சந்திக்கவில்லை. நேர்மாறாக மனோகரனின் வீட்டுக்கே சென்று, ‘‘நான் எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன்’’ என ஆசிர்வாதம் வாங்கிவிட்டு வந்திருக்கிறார் நடராஜன். தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகளில்கூட, மனோகரன் மிஸ்ஸிங். 

இதுபற்றி திருச்சி அ.தி.மு.க-வினரிடம் பேசியபோது மனோகரனுக்கு எதிராகப் பொரிந்து தள்ளினார்கள்.

“8 வருடங்களாக மாவட்டச் செயலாளராக இருந்த மனோகரன், யாரையும் மதிக்கவில்லை. தான் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். மாவட்டத்தில் இருந்த இரண்டு அமைச்சர்களும் தனக்குக் கட்டுப்பட்டவர்கள் எனக் காட்டிக்கொண்டார். அரசு நிகழ்ச்சிகளில் தலையைக் காட்டிய போதும் தன்னை முக்கியமானவராகக் காட்டிக்கொண்டார். எல்லோரையும் நக்கலாகத்தான் பேசுவார். கட்சியில் தன்னைத் தவிர வேறு யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

மனோகரனின் அலுவலகப் பொறுப்பாளராக இருந்தவர் நடராஜன். அமைச்சர், மாவட்டச் செயலாளர் என நடராஜனுக்குப் பதவிகள் கிடைத்திருக்கின்றன. அவருக்குள்ள பக்குவம், கட்சிக்காரர்களை அரவணைக்கும் தன்மை ஆகியவைதான் அதற்குக் காரணம். அதற்காக, நடராஜன் ரொம்ப நல்லவர் என்று சொல்லவில்லை. மனோகரனுக்கு நடராஜன் பரவாயில்லை. யார் தவறு செய்தாலும் அம்மா நடவடிக்கை எடுப்பார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்