வெளியேற்றப்பட்ட ஃபோர்த் எஸ்டேட்!

4th Gate

ட்டமன்றம் நடைபெறும் போது தலைமைச் செயலகத்தின் நான்காவது நுழைவு வாயில் ரொம்ப பிஸியாக இருக்கும். சட்டமன்றத்துக்குச் செல்லும் பெரும்பாலான எம்.எல்.ஏ-கள், இந்த வழியாகத்தான் போவார்கள், வருவார்கள். இந்த நுழைவு வாசலில்தான் மீடியாவினர் காத்துக் கிடப்பார்கள். இந்த நுழைவு வாயில் அருகில்தான் பத்திரிகையாளர்கள் அறை இருக்கிறது.

வெளிநடப்பு செய்யும் எதிர்க் கட்சியினர் இங்கேதான் பேட்டி கொடுப்பார்கள். இதெல்லாம் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செயப்படுவதற்கு முன்புவரை இருந்த நிலை. கோட்டையில் தி.மு.க. நடத்திய போட்டி சட்டமன்றத்தை மீடியா அப்படியே லைவ் செய்த பிறகு பத்திரிக்கையாளர்கள் தலைமைச் செயலகத்துக்குள் செய்தி சேகரிக்க ஏகக்கெடுபிடிகள். 

மீடியாவின் வாய்க்குப் பூட்டு போட முடியாததால் நான்காவது நுழைவுவாயிலுக்குப் பத்திரிகையாளர்கள் செல்ல முடியாதபடி பூட்டுப் போட்டுவிட்டார்கள். நான்காவது வாயில் அருகே பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்

பட்டிருந்த இடத்தைத்  துடைதெறிந்துவிட்டார்கள். 500 மீட்டருக்கு அப்பால் ஒதுக்குப்புறமாகப் பத்திரிகையாளர்களைக் கொண்டு போய்விட்டார்கள். இதே, நான்காவது வாசலில்தான் கடந்த காலங்களில் அ.தி.மு.க எதிர்க் கட்சியாக இருந்து பேட்டி அளித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்