செந்தில்பாலாஜியை சீண்டுகிறாரா தம்பிதுரை?

அரவக்குறிச்சி அதிரடிபூசல்

தேர்தல் சமயத்தில் எழுந்த பணப் பட்டுவாடா புகாரில் அரவக்குறிச்சி தொகுதியின் தேர்தல் ரத்தானது. இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கிய செந்தில்பாலாஜிக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக 2011ம் ஆண்டு 38 பேரிடம் ரூபாய் 60 லட்சம் மோசடி செய்ததாக, நீதிமன்ற உத்தரவுபடி, செந்தில்பாலாஜி உட்பட 3 பேர் மீது சில நாட்களுக்கு முன் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதால், வழக்குப் போட்ட கையோடு கைது நடவடிக்கைகள் இருக்குமோ என்கிற பரபரப்பு நிலவுகிறது.

இது இப்படியிருக்க... அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த ஒரு வாரமாக பொதுமக்களை சந்தித்து குறை கேட்டு மனு வாங்கி வருகின்றார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. தம்பிதுரையின் சுற்றுப்பயணம், சில இடங்களில் ‘வேட்பாளராக யாரை நிறுத்தலாம்’ என கேட்பதாக தகவல் வெளியானது. காலியாக உள்ள அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பாளர் மாற்றப்படுவரா என கரூரில் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

‘‘சந்தர்ப்பம் பார்த்து தம்பிதுரை கேம் ஆடுகிறார்’’ என சொல்கிறார்கள் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள். “மாவட்ட அரசியலில் தொடர்ச்சியாக தம்பிதுரை தன்னை நிலை நிறுத்திக்கொள்ள மற்றவர்களை கொம்பு சீவிவிடும் வேலையில் இருக்கிறார். செந்தில்பாலாஜியின் தம்பி அசோக், கட்சியில் எந்த பதவியிலும் இல்லை, அடிப்படை உறுப்பினராகவே இருந்து வந்தார். ஆனால் கட்சிக்காக பல வேலைகளை செய்தவர், கடந்த ஆட்சியில் செந்தில்பாலாஜி, செய்த பிரமாண்ட விழாக்கள், யாகங்கள் எல்லாவற்றிலும் அசோக்கின் உழைப்பு உள்ளது. கடந்த எம்.பி. தேர்தலில் தம்பிதுரையை ஆதரித்து கரூருக்கு வந்த ஜெயலலிதா வருகைக்காக ஹெலிபேட் அமைத்தது முதல் தம்பிதுரை வெற்றி வரை அனைத்தையும் கவனித்தவர் அசோக்தான் அவரை கட்சியைவிட்டு நீக்கிவைத்தார். கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்களில் தனது தம்பி அசோக்கின் சொத்து விவரங்களையும் தாக்கல் செய்தவர் செந்தில்பாலாஜி மட்டுமே (வேட்புமனுவை ஆராய்ந்த போது அப்படியான தகவல்கள் இல்லை).அப்படிப்பட்ட தம்பியை கட்சியில் இருந்து நீக்கியதால் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்பது தலைமையின் உத்தரவு, செந்தில்பாலாஜியின் பலத்தை குறைக்க நினைத்து இந்த வேலையை செய்திருக்கிறார்கள். அரவக்குறிச்சி தொகுதியில் ரத்து செய்யப்பட்ட தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடக்க வாய்ப்பு இருக்கிறது. மீண்டும் போட்டியிட செந்தில்பாலாஜி ஆர்வம் காட்டி வந்தார். அவரது தம்பி நீக்கப்பட்டதால் தனித்து விடப்பட்டுள்ளார்’’ என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்