உழைக்கும் மக்களின் பாடகன்!

பணிவு

ங்கரன்கோவில் வரலாற்றிலேயே தனி நபர் ஒருவரின் இறுதி நிகழ்ச்சியில் பல ஆயிரம் பேர் திரண்டது திருவுடையானுக்கு மட்டும்தான். வீதியோரம் வெறுமனே நின்ற மக்களைக்கூடத் தன் வெண்கலக் குரலால் வசீகரித்து கவலைகளை மறக்கச் செய்தவர் மக்கள் பாடகர் திருவுடையான். அவர் சாலைவிபத்தில் சிக்கி மரணம் அடைந்தார் என்ற செய்தியைக் கேட்டு கண்ணீர் கம்பலையுமாக வெள்ளம்போல மக்கள் திரண்டு வந்தனர்.

ஊக்கம் கொடுத்த தாத்தா!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நெசவுத் தொழிலாளிக்கு மகனாய்ப் பிறந்தவர் திருவுடையான். அவருடைய தந்தை பழனிச்சாமி, சங்கரன்கோவிலிலேயே கைத்தறி சேலைக்கு பார்டர் போடும் பேட் மேஸ்திரி. திருவுடையான் என்ற தன் தந்தையின் பெயரையே மகனுக்குச் சூட்டினார். பேரனின் இசையார்வத்தைப் புரிந்துகொண்ட திருவுடையானின் தாத்தா, பழனிச்சாமியை அழைத்து, ‘‘திருவுடையான் நன்றாகப் பாடுகிறான். அவனைப் பெரிய பாடகனாக்க வேண்டும்’’ என்றாராம். சாப்பாட்டுத் தட்டில் தாளம் போட்டு சிறப்பாகப் பாடக்கூடிய திருவுடையான், சிறந்த ஓவியக் கலைஞராகவும் வளர்ந்தார்.

உள்ளூர் கோயில்களில் பக்திப் பாடல்கள் மூலம் அவரது வெண்கலக் குரல் ஒலிக்கத் தொடங்கியது. வறுமை காரணமாக எட்டாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, அப்பாவுடன் நெசவுத்தொழிலில் ஈடுபட்டார். அவரிடம், பட்டுக்கோட்டையாரின் பாடல்களைக் கொடுத்துப் பாடவைத்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திடம் அழைத்துவந்தார்கள் நாடகக் கலைஞர் மு.சு.மதியழகனும், தாய்த் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் சங்கர்ராமும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்