குளத்துக்குள் குடியிருப்பு!

திருச்சி... அதிர்ச்சி!போராட்டம்

ந்தக் கால மன்னர்களைப் பற்றிப் படிக்கும்போது, ‘குளம்வெட்டி வளம் பெருக்கினான்’ என்பார்கள். குளத்தில் மண் அள்ளிப் போடுகிறது இன்றைய மன்னர்களின் ஸ்டைல்.

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் திருச்சி விமான நிலையத்துக்கு அருகில் உள்ளது கொட்டப்பட்டு பெரியகுளம். திருச்சியின் சுற்றுவட்டாரங்களில் பல்வேறு ஏரிகள் காணாமல் போனநிலையில், 29.7 ஹெக்டேர் அளவு கொண்ட கொட்டப்பட்டு குளம், 22.4 ஹெக்டேராக சுருங்கிவிட்டது. 18 ஊர்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய இந்தக் குளம், இன்னும் சில வருடங்களில் முழுவதுமாகக் காணாமல் போகலாம் என அஞ்சுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

காரணம், இந்தக் குளத்தில் மண்ணைக்கொட்டி இப்போது சிலர் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதுதான். இந்த நிலையில்... தண்ணீர் இயக்கம், சட்டப் பஞ்சாயத்து, மக்கள் பாதை உள்ளிட்ட இயக்கங்களோடு கொட்டப்பட்டு மக்களும் கடந்த 15 நாட்களாகக் குளத்துக்குள் நடக்கும் மண் கொட்டும் பணியைத் தடுத்ததோடு, குளத்தை மீட்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ‘தண்ணீர் இயக்க’த்தின் ஒருங்கிணைப்பாளர் வினோத்ராஜ் சேஷன், ‘‘திருச்சியில் இருந்த பல நீர்நிலைகள் இப்போது இல்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் மாவடிக்குளத்தை சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் சேர்ந்து தூர்வாரினோம். மாநகருக்குள் இப்போதைக்கு உள்ள பெரியகுளம் என்றால் கொட்டப்பட்டு குளம்தான். ஒருகாலத்தில் 18 கட்டளைப் பகுதிகளுக்கு பாசனத்துக்காகப் பயன்பட்டுவந்த இந்தக் குளத்துக்கு நீர்வரும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் செம்பட்டு, குண்டூர் மற்றும் கே.கே நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்யும் மழைநீர் இங்குதான் வருகிறது. ஆவின் பால் பண்ணை, அறிவியல் கோளரங்கம் போன்றவற்றை குளத்தையொட்டி 1998-ம் ஆண்டுக்குமுன் அரசு கட்டியது. இருக்கி குளமாவது மிஞ்சும் என நினைத்து கொண்டிருக்க, தண்ணீர் தேங்கி கிடக்கும் குளத்தில் போலீஸார் துணையுடன் லாரி லாரியாக மண் கொட்டி, பொக்லைன் துணையுடன் நிரவுகின்றனர். இதை கேட்டபோது, தி.மு.க ஆட்சிக் காலத்தில் 2008-ல் இந்தக் குளத்தில் 57 பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் பட்டா வழங்கியிருப்பதாக அதிகாரிகள் சொன்னார்கள்.

இந்த நிலம் முறைகேடாக வழங்கியிருப்பதாக தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் என்கிற அமைப்பு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிமணி, வழக்கில் சிக்கல்கள் இருப்பதால் வீட்டுமனை வழங்கிய அரசாணைக்கு எதிராக இடைகாலத் தடை விதித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்