ஜெயங்கொண்டம் நகராட்சி... பயம் கொண்ட மக்கள்!

ஊழல்... பாலியல் தொல்லைகள்துன்புறுத்தல்

செம்மையாக செயல்பட்டமைக்காக ஜெயங்கொண்டம் நகராட்சிக்கும் அதன் ஆணையருக்கும் கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் விருது வழங்கி கெளரவித்தார் மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜ். விருதுபெற்ற அந்த நகராட்சி ஆணையர் செல்வகுமாருக்கு எதிராகவும் நகராட்சி நிர்வாகத்துக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கின்றன.

குடும்பப் பெண்ணிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்டு அவரது வீட்டுக்கு வரச்சொன்ன ஆடியோ, காட்டுத் தீ போல் வைரலாகப் பரவ, ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராகப் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள் சமூக ஆர்வலர்கள். என்ன நடந்தது... ஏன் இந்தப் போராட்டம்?

நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர், ‘‘நகராட்சி குழாயில் வீட்டில் மோட்டாரை வைத்து ஒரு பெண்மணி சட்டவிரோதமாகத் தண்ணீர் எடுக்கிறார் எனத் தகவல் வந்தால், சோதனை என்கிற பெயரில் அந்த வீட்டுக்குப் போய் மோட்டாரை பறிமுதல் செய்யும் அதிகாரிகள், பணத்தை வாங்கிக்கொண்டு அவரிடமே அந்த மோட்டாரை திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.

அப்படித்தான் மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் வீட்டிலிருந்து மோட்டாரை எடுத்து வந்துவிட்டு அவரை வரச்சொல்லி பேச்சு வார்த்தை நடத்தி 500 ரூபாய் லஞ்சம் கேட்டு மோட்டரை அவரிடமே கொடுத்துவிட்டார் செல்வகுமார். ஒருமுறை இந்த லஞ்சப் பழக்கம் ஆரம்பித்ததும் அந்த வீட்டில் லஞ்சம் வாங்குவது ரெகுலராகிவிடும். அந்தப் பணத்தை கொடுக்க ஒரு நாள் தவறியதும் அதற்காக கமிஷனரே அந்தப் பெண்ணுக்கு போன் போட்டு ’ஐந்நூறு ரூபாய் என்னாச்சு?’ என்றாராம். அதற்கு அந்தப் பெண் ‘நாளைக்கு அலுவலகத்துக்கு வந்து கொடுத்துவிடுகிறேன்’ என்றார். ’அதெல்லாம் முடியாது நாளைக்கு என் வீட்டுக்கு வா’ என்று அந்த பெண்னை வற்புறுத்துகிறார் கமிஷனர். பணத்தை என் மாமனாரிடம் கொடுத்து விடுகிறேன்’ என்று அந்தப் பெண் சொன்னதை ஏற்காதவர், ‘அதெல்லாம் முடியாது, நீதான் வரவேண்டும்’ என்று கட்டாயப்படுத்தி அந்தப் பெண்ணை நேரில் வரவைத்தவர், தகாத வார்த்தைகளில் பேசி இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்