சிறுவாணி தண்ணீர்... சிந்தப்படும் கண்ணீர்!

அச்சத்தின் பிடியில் கோவை, திருப்பூர், ஈரோடுஆபத்து

காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என அறிவித்து டெல்டா விவசாயிகளை கர்நாடகா அரசு சோகத்தில் தள்ளியுள்ள நிலையில், மறுபுறம் காவிரியின் உப நதிகளில் ஒன்றான சிறுவாணியின் குறுக்கே அணை கட்ட முடிவெடுத்து கோவை பகுதி விவசாயிகளை அச்சத்தில் தள்ளியுள்ளது கேரளா அரசு.

கோயம்புத்தூரின் பெருமைகளில் ஒன்றாக அறியப்படுவது சிறுவாணி தண்ணீர். ஆசியாவிலேயே சுவை மிகுந்த, தூய்மையான குடிநீர் என்ற புகழைப்பெற்றது. கோவையில் இருந்து நாற்பது
கி.மீ. தொலைவில் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள சிறுவாணி அணை தமிழகத்துக்குச் சொந்தமானது என்றாலும், அணை அமைந்திருக்கும் இடம் கேரளா பகுதிக்குள் வருகிறது. 

தமிழகத்தின் வனப்பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, கேரளாவில் 25 கி.மீ தூரம் பயணித்து, கேரளாவுக்குள்ளேயே கூடப்பட்டி எனுமிடத்தில் பவானி ஆற்றில் கலக்கிறது. சிறுவாணி அணைக்கும், அது பவானி ஆற்றில் கலப்பதற்கும் இடையில் உள்ள அகழி ஊராட்சியில் உள்ள சித்தூரில்தான் அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கோவைக்கு மேற்கே 35 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடுக்குகளில் ஒன்றான ஆனைகட்டிக்கு அருகே உள்ள சித்தூர், வெங்கக்கடவில் அணைகட்ட கேரள அரசு முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்