அனல் பறந்த சபையில் சில ஐஸ்கிரீம் தருணங்கள்!

கதம்பம்

ரு மாதத்துக்கும் மேலாக நடந்து முடிந்திருக்கிறது சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர். தினமும் அனல் பறந்த போதும் ‘கூல்’ தருணங்களும் அரங்கேறின. சட்டசபை கூட்டத் தொடரின் உதிரிப் பூக்களை கதை மாலையாக இங்கே கட்டித் தந்திருக்கிறோம்.

* தொழில் துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய தி.மு.க-வின் டி.ஆர்.பி.ராஜா, “தமிழ்நாட்டில் இருந்து தொழில் நிறுவனங்கள் வெளியேறியதற்குக் காரணம் என்ன?” என்று ஆங்கிலத்தில் கேட்க, அவருக்குப் பதில் அளித்த முதல்வர், “மை டியர் யங் பாய்...” என விளித்தார். இப்படி எதிர் முகாமை சேர்ந்தவர்களை ஜெயலலிதா அழைத்தது ஆச்சர்யம்தான். பதிலுக்கு ராஜாவும், “மேடம்” என்றார்.

* சட்டமன்றத்தில் உள்ள நூலகத்தில், கடந்த கால சட்டசபையின் நிகழ்வுகள் மற்றும் சபைக்குறிப்புகள் உள்ளன. அதை அதிகம் பயன்படுத்துபவர் கள் தி.மு.க உறுப்பினர்கள்தான். அ.தி.மு.க-வினரை அவ்வளவாகப் பார்க்க முடியவில்லை. புத்தங்களைப் படித்து குறிப்புகளை கையில் வைத்துக்கொண்டு சபையில் வாதங்களை வைக்கின்றனர் தி.மு.க-வினர்.

* மதிய உணவு இடைவேளை இல்லாமல் சபை நடைபெற்றது. முக்கிய விவாதங்கள் லஞ்ச் நேரத்தில் நடைபெறும் போது வெளியேற முடியாமல் உறுப்பினர்கள் நெளிந்தனர். சிலருக்கு சுகர் இருப்பதால் பசியை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர். ‘‘சாப்பிடக்கூட நேரம் தராமல் சபையை நடத்தி எங்களுக்கு அல்சர் வந்துவிட்டது’’ என சபாநாயகரிடம் புலம்பிவிட்டார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமசாமி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்