மோடி அரசை எதிர்த்து 22 கோடி பேர் ஸ்டிரைக்!

தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டம்...உரிமைக்குரல்

மோடி அரசு கடைப்பிடித்துவரும் ‘மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகள்’, ‘தொழிலாளர் விரோத நடவடிக்கைகள்’ ஆகியவற்றைக் கண்டித்து மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 2-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகின்றன. இந்தப் போராட்டத்தில், இந்தியா முழுவதும் சுமார் 22 கோடி பேர் பங்கேற்கிறார்கள் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட இடதுசாரி தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி, காங்கிரஸ், பி.ஜே.பி தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன என்பதுதான் ஆச்சர்யம். தமிழகத்தில் தி.மு.க-வின் தொ.மு.ச., விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. இதுதொடர்பாக, தொழிற்சங்க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

சவுந்திரராஜன், (சி.ஐ.டி.யு): “நவீன பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்திய இந்த 25 ஆண்டுகளில் தொழிலாளர் நலச்சட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை. பல புதிய சட்டங்களின் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கிறார்கள். தொழிற்சங்கங்களை முடக்கப் பார்க்கிறார்கள். தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்கவே இந்த வேலைநிறுத்தம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்