மீண்டும் ஊழல் புகார்... கோலிவுட் களேபரம்!

மோதல்

ட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்பதைப்போல, தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் நிர்வாகிகள் மாறியும் பிரச்னைகள் மாறவில்லை. சரத்குமார், ராதாரவி தலைமையிலான அணியை வீழ்த்தி, அரியணையில் ஏறிய விஷால் அணியினர் மீது பூமராங் போல திரும்பி இருக்கிறது ஊழல் குற்றச்சாட்டு.

நடிகர் சங்கத்தின் இடத்தை சொற்பத் தொகைக்கு குத்தகைக்குக் கொடுத்தது உள்ளிட்ட விவகாரங்களில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், அதன் முன்னாள் தலைவர் ராதாரவி ஆகியோருக்கு எதிராக விஷால் தலைமையில் எதிர்ப்பு அணி எழுந்தது. அந்த அணி சரத்குமார், ராதாரவி அணியை மண்ணைக் கவ்வ வைத்தது. நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் இடம் பொற்ற அணி அதிகாரத்துக்கு வந்தது.

இப்போது, புதிய நிர்வாகிகளுக்கு எதிராகவும் ஊழல் புகார் புறப்பட்டுவிட்டது. இதைக் கிளப்பியவர் வாராகி. இவர், பல பிரச்னைகளுக்காகப் பொதுநல வழக்குகள் தொடுத்தவர்.

வாராகியிடம் பேசினோம். “நடிகர் சங்கத்தில், புதிய நிர்வாகிகள் பதவியேற்ற பிறகு, அவர்களின் நடவடிக்கைகள் சரியில்லை. சங்கத்தின் முதல் பொதுக்குழுவிலேயே, சங்கக் கட்டட வளர்ச்சி நிதிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்​போவதாகச் சொன்ன விஷால், அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கான உரிமையை சன் டி.வி-க்கு வழங்கி இருப்பதாகச் சொன்னார்.   அப்போதே அதை நான் எதிர்த்தேன்.

‘மற்ற சேனல்களை அப்ரோச் செய்யவில்லையா?’ என்றதற்கு, ‘யாரும் வாங்கவில்லை’ என்றார். ‘நீங்கள் யாரிடம் அப்ரோச் செய்தீர்கள். அதற்கான ஆதாரம் உள்ளதா?’ எனக் கேட்டதற்கு விஷாலும், கார்த்தியும் மழுப்பினார்கள்.  ரைட்ஸ்க்காக வாங்கியதில் கையிருப்பு வெறும் ஏழு கோடி ரூபாய் என்கின்றனர். அதில், மூன்று கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளனர். மேலும், மூன்று நாட்கள் நடிகர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தியதற்காகப் பேசிய தொகை போக, 6 கோடி ரூபாயை அந்த நிறுவனத்திடம் இருந்து நாசர், விஷால், கார்த்தி மூவரும் பெற்றுள்ளனர். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

புதிய கட்டடம் கட்டவிருக்கும் பெங்களுருவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் உரிமை​யாளரையும் அதே பொதுக்குழுவில் அறிமுகப்​படுத்தினார். டெண்டர் விடாமலேயே கட்டுமான நிறுவனத்தை முடிவுசெய்துவிட்டனர். கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் விஷாலின் நண்பர் என்பதும், கட்டடத்தின் சதுர அடி ஒன்றுக்கு 300 ரூபாய் வீதம் கமிஷன் பேசியுள்ளனர் என்பதும் தெரியவந்தது. இவை தொடர்பாக விளக்கம் கேட்டு மூன்று கடிதங்கள் அனுப்பினேன். அதையடுத்து, 27-ம் தேதி நேரில் வரும்படி அழைத்தனர். அதன்படி, அலுவலகம் சென்றேன். அங்கு தி.மு.க கரைவேட்டி அணிந்த 10-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். கதவை சாத்திக்கொண்டு என்னை அசிங்கமாகப் பேசி, தாக்க முயன்றனர். பயந்துபோய் வெளியே ஓடிவந்தேன். இதுதொடர்பாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தேன்” என்றார் வாராகி கொதிப்புடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்