கசிந்தது கப்பல் ரகசியம்... கேள்விக்குறியில் பாதுகாப்பு!

ஆபத்து

து, ‘ஹேக்கர்கள்’ எனப்படும் ‘இணைய ஊடுருவிகள்’ மற்றும் தகவல் தருபவர்களின் (WhistleBlowers) யுகம். ஒரே ஒரு மவுஸ் க்ளிக்கில், ஒரு நாட்டின் பாதுகாப்பையே ஆட்டம்காண வைக்க முடியும் என காட்டிவிட்டார்கள் ஹேக்கர்கள்.

இந்திய கடற்படைக்காக நம்நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும், ‘ஸ்கார்பியன்’ ரக நீர்மூழ்கிக் கப்பலின் தொழில்நுட்ப, ஆயுதங்களின் விவரங்கள் உள்ளிட்ட 22 ஆயிரத்து 400 பக்கங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளதாக வெளியான செய்தி, இந்தியப் பாதுகாப்புத் துறை வட்டாரத்தை அதிரவைத்துவிட்டது. இதுதொடர்பான செய்தியை வெளியிட்டது, ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் ‘தி ஆஸ்திரேலியன்’ என்ற பத்திரிகை.

இதனையடுத்து, கடற்படை மூத்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் ஏதாவது சதித் திட்டம் உள்ளதா என்பது குறித்தும், இந்த ஆவணக் கசிவால், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுமா என்பது குறித்தும் விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் பாரிக்கர். 

இந்த ஆவணக் கசிவு விவகாரத்தால், ஆஸ்திரேலியா அரசும் அதிர்ந்து போயிருக்கிறது. ஏனெனில், இந்தியா ஒப்பந்தம் செய்திருந்த பிரான்ஸ் நாட்டின் அதே டி.சி.என்.எஸ் நிறுவனத்திடம் இருந்து 12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஆஸ்திரேலியாவும் ஒப்பந்தம் செய்திருந்தது. சுமார் 38 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்த ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா செய்துள்ளது. ஆனால், இந்தியாவுக்கு வழங்கப்படும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இவை முற்றிலும் மாறுபட்டது என்றபோதிலும், இன்று இந்தியாவுக்கு ஏற்பட்ட இதே நிலை, நாளை தங்களுக்கும் ஏற்பட்டால் என்னவாகும் என அச்சமடைந்தது ஆஸ்திரேலியா.

இந்த நிலையில், “ஸ்கார்பியன் கப்பல் குறித்த தகவல்கள் இந்தியாவுக்காக 2011-ம் ஆண்டு பிரான்ஸ் அரசால் கணினியில் தொகுக்கப்பட்டுள்ளன. அதே ஆண்டு பிரான்ஸ் கடற்படை முன்னாள் அதிகாரி ஒருவரால் அந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி செய்தவர், அந்த நேரத்தில் டி.சி.என்.எஸ் நிறுவனத்தின் சப் கான்ட்ராக்டராக இருந்துள்ளார். அவருக்கு பின்னர் அந்தத் தகவல்கள் பலரது கைகளுக்கு மாறி, அதன்பின்னரே எங்களுக்கு வந்துள்ளன. நாங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு வழங்க உள்ள நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்த விவரங்கள் வெளியில் கசியாமல், உரிய பாதுகாப்பு நடவடிக்கைளை டி.சி.என்.எஸ் நிறுவனமும், ஆஸ்திரேலிய நிறுவனமும் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையிலேயே எங்களுக்கு வந்த இந்தியா - பிரான்ஸ் இடையேயான அந்த கப்பல் ஒப்பந்த தகவல்களை வெளியிட்டோம்” என ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகை தெரிவித்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்