கழுகார் பதில்கள்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

நடிகர் சங்கத்தில் இவ்வளவு சீக்கிரம் கூச்சல், குழப்பம், ஊழல் என்று இருக்கிறதே?

சரத்குமார், ராதா ரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் மீது மிகப் பெரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தலைச் சந்தித்து வென்றவர்கள், அடுத்தடுத்து அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் வெளிப்படையாக இறங்கவில்லை என்று தெரிகிறது. பழைய நிர்வாகிகள், புதிய நிர்வாகிகளில் சிலரை தங்களது கைப்பாவை ஆக்க முயற்சிப்பதாகவும் தெரிகிறது. எனவே, தமக்கு முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் மீது தாங்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளில் இருக்கும் உண்மைகளை நிரூபித்து உரிய தண்டனையைப் பெற்றுத் தரவேண்டிய பொறுப்பு விஷால், நாசர் உள்ளிட்டோருக்கு இருக்கிறது.

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

மனிதவள மேம்பாட்டு நிபுணரான மாஃபா பாண்டியராஜன் அமைச்சர் பதவியில் தாக்குப் பிடிப்பாரா?

உண்மையான மனிதர்களை இப்போதுதான் அவர் அடையாளம் காணப்போகிறார்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

வைகோ யதார்த்தவாதியா... சந்தர்ப்பவாதியா... சுயநலவாதியா?

தான் யார் என்று அவருக்கே தெரியாததுதான் சிக்கல்!

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

அ.தி.மு.க-வில் இருக்கும் பல்வேறு திறமைசாலிகளைப் புறந்தள்ளிவிட்டு சசிகலா புஷ்பாவை மாநிலங்களவைக்கு அனுப்பியது ஜெயலலிதாவின் பெருந்தவறுதானே?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்