மிஸ்டர் கழுகு : புது கவர்னர் ‘வித்தியாச’சாகர்!

விநாயக சதுர்த்தி சுண்டலோடு வந்திருந்தார் கழுகார். ‘‘கவர்னர் ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்பு தரவில்லையே ஏன்?’’ என பிள்ளையார் சுழி போட்டோம். ‘‘காரத்துக்கு பெயர் போன ஆந்திராவில் இருந்து வந்த ரோசய்யா கவர்னர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து, அவரின் செயல்பாடுகளில் பெரிய காரம் எதுவுமில்லை. ‘தஞ்சாவூர், அரவக்குறிச்சித் தொகுதிகளுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் விரைவில் நடத்த வேண்டும்’ என அறிக்கை வெளியிட்டதுதான், அதிகபட்சமாக அவரிடமிருந்து வெளிப்பட்ட சூடான வார்த்தைகள். அதுவும் யாருடைய நிர்பந்தத்தின் பேரில், அவர் அதைச் சொன்னார் என்பது எல்லோரும் அறிந்ததே. கிட்டத்தட்ட தமிழக அரசாங்க ஊழியர் போல் இருந்த ரோசய்யாவை, அடுத்த 5 ஆண்டுகளும் தக்கவைத்துக்கொள்ள நினைத்தார் ஜெயலலிதா. அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மத்திய அரசு விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரை இதுவரையில் கவர்னராக நீடிக்க வைத்தது மத்திய பி.ஜே.பி. அரசு. மீண்டும் அவருக்கே பதவி நீட்டிப்பு என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதோடு மாநில அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அவ்வப்போது தலையில் தட்டிவைக்கும் ஒருவர், கவர்னராக இருக்க வேண்டும் என நினைத்தது மத்திய அரசு. அதனால்தான் ரோசய்யாவுக்குப் பதில் மஹராஷ்டிரா கவர்னரான வித்யாசாகர் ராவை தமிழகத்தின் பொறுப்பைக் கூடுதலாக கவனிக்க சொல்லியிருக்கிறது. இவர்் நிரந்தரம் அல்ல. வித்யாசாகரே நிரந்த கவர்னராக நியமிக்கப்படவும் வாய்ப்புகள் இருக்கிறதாம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்