மிரட்டும் நடுநிசி நாய்கள்

ஒரு லட்சம் பேருக்குக் கடி!தொல்லை

தெருநாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை. அதுவும் நள்ளிரவில் நாய்களிடம் சிக்கினோம் என்றால், அதோ கதிதான். அதற்காக நாய்கள் மொத்தத்தையும் கொன்றுவிட முடியுமா? அப்படி ஒரு முடிவை கேரள அரசு எடுத்தது அகில இந்திய சர்ச்சைகளில் ஒன்றாக மாறிவருகிறது!

கேரளத் தெருக்களில் இரண்டரை லட்சம் நாய்கள் சுற்றித்திரிவதாகவும், அங்கு, கடந்த ஓராண்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்கடியால் அவதிப்படுவதாகவும் வரும் செய்திகள் சொல்கின்றன.  திருவனந்தபுரத்தில், சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம், மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கீழ் புல்லுவிளையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரை தெருநாய்கள் கடித்துக் குதறிவிட்டன. படுகாயம் அடைந்த அந்த மூதாட்டி இறந்தே போனார். இதுபோன்ற பல சம்பவங்களின் எதிரொலியாக, தெருநாய்களால் ஏற்படும் அச்சுறுத்தலைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொது மக்களிடம் இருந்து எழுந்தது. இந்த நிலையில், தெரு நாய்களைக் கட்டுப்படுத்த ஆலோசனைக் கூட்டம் ஒன்றை கேரள அரசு நடத்தியது. அதில், நாய்களை விஷ ஊசி போட்டு கொல்வது என்று முடிவுசெய்யப்பட்டது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் மேனகா இதனைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

கேரள அரசின் முடிவு குறித்து, ப்ளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த டான் வில்லியம்ஸிடம் கேட்டதற்கு, “தெரு நாய்களைக் கொல்வதால் மட்டுமே அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிடாது. எந்த ஒரு உயிரைக் கொல்வதற்கும் நமக்கு உரிமை கிடையாது. நாய்களின் கருத்தடைக்காக மத்திய அரசு தரும் நிதியை சரியான முறையில் பயன்படுத்தினாலே பிரச்னை இருக்காது” என்றார்.

தெரு நாள்களின் தொல்லைகளுக்கு தமிழ்நாடும் தப்பவில்லை என்பதற்கு, சட்டமன்றத்தில் நடந்த ஒரு விவாதமே சாட்சி.

“எம்.எல்.ஏ விடுதியில் நாய்களின் தொல்லை அதிக அளவில் உள்ளது. அதைக்கட்டுப்படுத்த வேண்டும்” என்று சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் பேசினார். அதற்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “பேரவைத் தலைவரின் உத்தரவின் பேரில், மாநகராட்சி மூலம் நாய் வண்டி காலை 10 முதல் 12 மணி வரையும், பகல் 2 முதல் 5 மணி வரையும் நிறுத்தப்பட்டு நாள்கள் பிடிக்கப்படுகின்றன” என்றார். உடனே எழுந்த தி.மு.க-வின் துரைமுருகன், “நாய்களைப் பிடித்து கருத்தடை செய்வது, மேனகா காந்திக்குத் தெரிந்தால் என்ன ஆவது?” என்றார். அதற்கு பன்னீர் செல்வம், “நாய்களை வதைசெய்தால்தானே? கருத்தடை செய்வதில் தடை ஒன்றுமில்லையே” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்