டெங்கு டேஞ்சர்... ஐ.சி.யு-வில் ஆட்சி நிர்வாகம்!

அபாயம்

சுகாதரத் துறை எந்த அளவுக்கு நோய்வாய்ப் பட்டுள்ளது என்பதை இந்த செய்தி உரக்கச் சொல்கிறது.

‘திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகிறது. அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கடந்த 31-ம் தேதி சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர் வி.ஜே.ராஜேந்திரன் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். அதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திருவள்ளூரில் மர்ம காய்ச்சல் என்ற பேச்சுக்கே இடமில்லை. வைரஸ் காய்ச்சலைத் தடுக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூரில் கூடுதல் மருத்துவர்களை நியமித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வைரஸ் காய்ச்சல் முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எல்லா காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் அல்ல” என நெடிய விளக்கம் கொடுத்தார் விஜயபாஸ்கர்.

அன்றைய நிலவரப்படி தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் தெரியுமா? உண்மையை சொன்னால் வாயடைத்து போவீர்கள். 31-ம் தேதி கணக்குப்படி 1,315 பேர் தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார் கள் என தமிழக அரசின் ரிப்போர்ட் சொல்கிறது.

மருத்துவத் துறை சார்பாக தமிழகத்தில் மொத்தம் 43 மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அளவில் 1,315 பேர் (30.08.2016) டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார் கள். இது அரசு தலைமை மருத்துவமனைகளின் சிகிச்சை பெறுபவர்கள் விவரம். அதிக அளவாக திருப்பூரில் 203 பேருக்கு டெங்கு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் சென்னையும் (119 பேர்), மூன்றாம் இடத்தில் சங்கரன்கோவிலும் (117), நான்காம் இடத்தில் திருப்பூரும்(110), ஐந்தாம் இடத்தில் திருவள்ளூரும் (103) உள்ளன. கோயம்புத்தூரில் 95 பேருக்கும், கோவில் பட்டியில் 55 பேரும், கன்னியாகுமரியில் 39  பேரும் டெங்குவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பெரம்பலூர், சிவகங்கை, சிவகாசி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா இருவருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 3 பேருக்கும் டெங்கு உள்ளது. டெங்கு இல்லாத மாவட்டமே கிடையாது. அரசு தலைமை மருத்துவமனைகளில் IGM – Elisa பரிசோதனை செய்ய NIV என்ற கிட் தேவை. இதை வைத்துதான் டெங்கு பரிசோதனை செய்யப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனை, கிண்டி மருத்துவமனை மற்றும் மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரியுடன் கூடிய அரசு தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த கிட் மூலம் 1,253 பேருக்கு டெங்கு உறுதி செய்யப் பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கை இதைப்போல் மூன்று மடங்கு இருக்கும் என்கிறார்கள்.

மற்ற தனியார் மருத்துவமனைகளில் பலமுறைகளில் (IGM- Elisa, Ns1-Elisa, Ns1- card method, Ns1 Antigen (Ag) igG- card method ஆகிய முறைகளில்) ரத்தப் பரிசோதனை செய்து டெங்கு இருப்பதை உறுதி செய்வார்கள். இந்த வகை பரிசோதனைகள் கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சிகளில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பேரில் நடக்கும். மஸ்தூர் (DBC) களில் மூலம் இந்த ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவர்கள் தண்ணீர் தேங்கும் இடங்கள், குப்பைகள், கழிவுநீர் தேங்கும் இடங்கள், சாக்கடை போன்ற இடங்களில் ஆய்வு நடத்தி சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்பகுதி மக்களுக்கும் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும். தொட்டிகளை பிளீச்சிங் மாத்திரைகள் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். அந்தப்பகுதியில் உள்ளவர்களுக்கு பிளீச்சிங் பவுடர் கொடுப்பது, நிலவேம்பு கஷாயம் கொடுப்பது போன்ற பணிகளையும் செய்ய வேண்டும். காய்ச்சல் உள்ள பகுதிகளில் அரசு மருத்துவர், சுகாதார ஆய்வாளர், மஸ்தூர் உள்ளிட்டோர் குழுவாக இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் மாவட்ட பூச்சியல் அலுவலர் தலைமையில் இயங்குவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்