மஞ்சள் நகரில் வேளாண் கண்காட்சி

நீங்க வர்றீங்களா?விவசாயம்

சுழற்றி எடுக்கும் பருவநிலை மாறுபாடுகளும், விவசாயத்தின் மீது அரசுகள் காட்டும் மாற்றான் தாய் மனப்பான்மையும் அதன் மீது இருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்தாலும், உயர்ந்து வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை விவசாயம் மீது கவனத்தைக் குவிக்க வைத்துள்ளன. விவசாயம் என்றாலே கடன்தான், என்ற பேச்சு ஒருபுறம் இருந்தாலும், அதையும் மீறி விவசாயம் பெருமளவில் நடந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

ரசாயன உரங்கள் என்ற பெயரில் உப்புகளை மண்ணில் கொட்டிக் கொட்டி, மண்ணில் உயிர்ச் சத்துக்கள் இல்லாமல் மலடாகி, உற்பத்தித் திறனை இழந்து நிற்கிறது. ஆனால், வற்றிய மடியில் பால் கறப்பதுப் போல, விளைச்சலை எடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் விவசாயிகள் மீண்டும் மீண்டும் அதிக உப்பைக் கொட்டி வந்த நிலையும் இருந்தது. ஆனால், வறண்ட நிலத்தில் பொழியும் ஒரு பெருமழை, கருகிக்கிடந்த தாவரங்களுக்குள் ஊறிக்கிடக்கும் நம்பிக்கையை தளிர்க்கச் செய்வதுப் போல, ரசாயன விவசாயத்தால் இற்றுப்போய் கிடந்த விவசாயிகளுக்கு சற்று தெம்பு கொடுத்தது இயற்கை வழி வேளாண் தொழில்நுட்பங்கள். இதை தமிழக விவசாயிகள் மத்தியில் பரப்பியதில் பசுமை விகடனுக்கு பெரும் பங்குண்டு.

இன்றைக்கு விவசாயத்தையும் லாபகரமாக செய்ய முடியும் என்பதை பல விவசாயிகளையும், படித்த இளைஞர்களையும் சொல்ல வைத்திருக்கிறது பசுமை விகடன். பாரம்பர்யத்தையும், அறிவியலையும் இணைத்து அடுத்த கட்டத்தை நோக்கி விவசாயத்தை நகர்த்திக் கொண்டு செல்வதில் செவ்வனே செயலாற்றி வருகிறது. இளசுகளைப் பார்த்து, ‘மழை பெய்தால் விதைப்போம்’ என்ற மனநிலை மாறி, இருக்கும் நீரை வைத்து எப்படி விவசாயம் செய்யலாம் என்ற எண்ணம் பெரியவர்கள் மனதிலும் அதிகரித்திருக்கிறது. இதற்கான தேவை தொழில்நுட்ப ஆலோசனைகளும், முறையான வழிகாட்டுதலும், பயிற்சிகளும் தான்.

இதனை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் இயற்கை விவசாய பயிற்சிகள், கருத்தரங்குகள் என பல நிகழ்ச்சிகளை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறது பசுமை விகடன். இதன் அடுத்த முயற்சியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ’ என்ற பெயரில் மாபெரும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்