மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/09/2016)

மிஸ்டர் மியாவ்

குற்றம் - 23

சமீபத்தில் போலீஸ் வாகனத்தை மோதிய அருண்விஜய், அசிஸ்டென்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ‘குற்றம்-23’. ‘சாட்டை’ மஞ்சிமா நாயகியாக நடிக்கிறார். மெடிக்கல் த்ரில்லர் கதை. திரைமறைவில் மருத்துவத் துறையில் நடக்கும் அதிரவைக்கும் தகிடுதத்த நிகழ்வுகளைக் கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார் அருண்விஜய். ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களின் ஸ்டண்ட் மாஸ்டரும் அஜித்தின் ஆஸ்தான சண்டைப் பயிற்சியாளருமான செல்வம், வில்லன் வேடத்தில் நடுநடுங்க வைத்து இருக்கிறார்.

இட்லி

ஒரு வங்கியில் இருக்கும் காந்தி நோட்டை கொள்ளை அடிக்க மூன்று கிழவிகள் திட்டமிடுகின்றனர். சரண்யா, கோவை சரளா, கல்பனா மூவரும் சேர்ந்து அடிக்கும் காமெடி கலாட்டாவில், ரசிகர்களுக்கு நிச்சயம் வயிற்றுவலி கேரண்டியாம். ஊர்வசியின் அக்காவான கல்பனா திடீரென இறந்துவிட்டதால், அவரைப்போலவே உடல்மொழி கொண்ட வேறோரு பெண்ணை நடிக்க வைத்து முகத்தை மட்டும் கிராஃபிக்ஸில் மாற்றப்போகிறார், பழம்பெரும் கதாசிரியர் தூயவனின் மகனான இயக்குனர் பாபு தூயவன்.

சிங்கம் - 3

‘சிங்கம் - 2’ படத்தில் தூத்துக்குடி போலீஸ் அதிகாரியாக இருந்த  சூர்யாவை, ‘சிங்கம் -3’ படத்துக்காக வைசாக் பகுதிக்கு டிரான்ஸ்ஃபர் செய்கிறார்கள். அங்கேயும் தனது சாகசத்தைக் காட்டுகிறார். ‘சிங்கம் - 2’ படத்தில்  நீக்ரோவை வில்லனாக நடிக்க வைத்ததுபோல், ‘சிங்கம்-3’ படத்தில் வெளிநாட்டு காஸ்ட்லி வெள்ளைக்கார வில்லன் ஒருவரை நடிக்க வைக்கத் திட்டமிட்டு இருந்தார் இயக்குநர் ஹரி. தயாரிப்பு தரப்போ, படத்தின் பட்ஜெட் எகிறும் என்று இந்தி சீரியலில் நடித்துவரும் ஒரு நடிகரை வில்லனாக்கி இருக்கிறது. அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், விவேக், சூரி என நடத்திரப் பட்டாளம் வேறு இருக்கிறது.

பைரவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க