பேங்க் ஆஃப் புருடா! - கலெக்டர் ஆபிஸ் பக்கத்தில் `கப்சா’ வங்கி

மோசடி

செயின் பறிப்பு, வீடுபுகுந்து கொள்ளை, வழிப்பறி என நாளுக்கு நாள் அதிகரித்துவரும் திருட்டும் கொள்ளையும் தமிழகத்தையே மிரட்டிக்கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், டுபாக்கூர் பேங்க் ஒன்றை ஆரம்பித்து லட்சக்கணக்கில் பணத்தைச் சுருட்டிய சம்பவம் ஒன்று தமிழகத்தையே கதிகலங்க வைத்திருக்கிறது.

தர்மபுரியில் அரசு கலைக் கல்லூரிக்கு எதிரே கலெக்டர் ஆபிஸ் அருகிலேயே ‘யெஸ் ஏபிஎஸ் பேங்க்’ (YES ABS BANK) என்ற பெயரில் வங்கி ஒன்று செயல்பட்டு வந்தது. ‘யெஸ் வங்கி’ (YES BANK) என்ற தனியார் வங்கி ஒன்று ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் நாடு முழுவதும் இயங்கி வருகிறது. இந்த வங்கிப் பெயருக்கு நடுவில் ஏபிஎஸ் என்பதைச் சேர்த்து தர்மபுரியில் கடந்த ஏப்ரல் முதல் அந்த வங்கி செயல்பட்டு வந்துள்ளது. திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த வங்கி செயல்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களாக அந்த வங்கி செயல்பட்டு வந்த நிலையில், அது ஒரு போலி வங்கி என்பது சேலத்தில் உள்ள யெஸ் வங்கி அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது. அதையடுத்து, போலீஸார் விசாரணையில் இறங்கியபோது, பென்னாகரத்தை அடுத்த கூர்க்காம்பட்டியைச் சேர்ந்த சோமசுந்தரம், அந்த போலி வங்கியை நடத்துவது தெரியவந்தது. யெஸ் வங்கியின் சேலம் கிளைமேலாளர் சசிகுமார் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது.

போலி வங்கியை நடத்திய சோமசுந்தரம், அங்கு பணிபுரிந்த தருமபுரியைச் சேர்ந்த பாலாஜி,  நாமக்கலைச் சேர்ந்த சுந்தரேசன், ‘யெஸ்’ வங்கியின் பெயரில் போலி செலான்கள் அச்சடித்துக்கொடுத்த  அச்சக உரிமையாளர் முருகேசன் ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். நாமக்கலைச் சேர்ந்த ஜெயபிரபு என்பவர் தேடப்பட்டு வருகிறார்.

இந்த வழக்கை விசாரித்துவரும் தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி-யான சந்திரசேகரனிடம் பேசினோம். “சோமசுந்தரமும், ஜெயபிரபுவும் சேர்ந்துதான் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரலில்தான் இந்த வங்கியை ஆரம்பித்துள்ளனர். யெஸ் வங்கி, ‘மணி ட்ரான்ஸ்ஃபர்’ உள்ளிட்ட சில சேவைகளுக்கு மட்டும் முகவர்களை வைத்துள்ளது. அதைப் பயன்படுத்திக்கொண்டு, பல பேருக்கு வேறு சோர்ஸ் மூலமாக, மணி ட்ரான்ஸ்ஃபரை சோமசுந்தரம் செய்துகொடுத்துள்ளார். அவசரத்துக்கு தன் பணத்தில் இருந்து மணி ட்ரான்ஸ்ஃபர் செய்து கொடுப்பதும், பின்பு அந்தத் தொகையை வாடிக்கையாளர்களிடம் வசூலித்துக் கொள்வது என முதலில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார். தொடர்ந்து வருபவர்களிடம், ‘மொத்தமாக ஒரு தொகையை வைப்புத்தொகையாக வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது எல்லாம் அந்தத் தொகையில் இருந்து மணி ட்ரான்ஸ்ஃபர் செய்துகொள்ளலாம்’ என்று பிள்ளையார்சுழி போட்டுள்ளார். பின்னா், அதை வங்கியாக மாற்றி, சேமிப்புக்​கணக்கு எல்லாம் ஆரம்பித்து கொடுத்துள்ளார். ‘யெஸ் ஏபிஎஸ் வங்கி’ என்று பெயர் வைத்திருந்தாலும், யெஸ் வங்கியின் முத்திரையை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்​படுத்தியுள்ளனர். ‘யெஸ் வங்கி’ என்ற பெயரில் போலி செலான் அச்சடித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்