மிஸ்டர் கழுகு : ஜூ.வி.ஆக்‌ஷன்... அரசு ரியாக்‌ஷன்! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/09/2016)

மிஸ்டர் கழுகு : ஜூ.வி.ஆக்‌ஷன்... அரசு ரியாக்‌ஷன்!

 

‘‘உமது நிருபர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போடும்’’ என்றபடி என்ட்ரி ஆனார் கழுகார்.

“ ‘கோட்டையில் இல்லாத முக்கிய அதிகாரிகள்’ என்கிற தலைப்பில் 14.8.16  தேதியிட்ட இதழில் சொல்லியிருந்தேன் ஞாபகம் இருக்கிறதா? அதே மாதிரி கடந்த இதழில் ‘தலை இல்லாத செயலகம்’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியானது. அன்று மாலையே 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர் வெளியானது. பல மாதங்களாக நிலவிவந்த நிர்வாகக் குளறுபடிகளுக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டது. நிருபர்களுக்கு என் பாராட்டை சொல்லும்’’ என சொல்லிவிட்டு செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘தலைமைச் செயலகத்தில் முக்கியமான துறைகளுக்குச் செயலாளர்கள் இல்லாதது, சிலர் காத்திருப்பு பட்டியலில் வைத்திருந்தது, சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள், பழிவாங்கப்பட்டவர்கள் என ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் நிலவிய கோபத்தை கவர் ஸ்டோரியாக கடந்த இதழில் வெளியிட்டிருந்தோம். அது, தலைமைச் செயலகத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் பேச்சாகக் கிளம்பியது. உடனே ஐ.ஏ.எஸ். தொடர்பான ஃபைல்கள் அனைத்தும் முதல்வரின் அலுவலகத்துக்குக் கொண்டு போனார்கள். விறுவிறு என வேலைகள் தொடங்கின. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டத்தில் நிலவிய பிரச்னை பற்றி பேசப்பட்டது. அதன்பிறகு 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் பற்றிய அறிவிப்பை தலைமைச் செயலாளர் ராம்மோகன ராவ் வெளியிட்டார்’’

‘‘ஓஹோ’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க