“லோக் ஆயுக்தாவைக் கொண்டுவர ஜெயலலிதாவுக்கு தைரியமில்லை!”

பேட்டி

“ஊழலுக்கு எதிராக விசாரணை செய்யும் மாநில நீதி அமைப்பான லோக் ஆயுக்தாவைக் கொண்டுவருவதாக அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் சொன்னது எல்லாம் சுத்தப் பொய். மக்களை ஏமாற்றும் போலி வாக்குறுதி அது. கவர்னர் உரையில்கூட அது பற்றி சொன்னார்கள். ஆனால், எதுவும் செய்யவில்லை” என்று கொந்தளிக்கிறார் எஸ்.ஏ.என்.வசீகரன்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்​பாளரான வசீகரன், தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார். 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தும், அரசிடம் எந்த அசைவும் இல்லை. எனவே, கடந்த 6-ம் தேதி போயஸ் கார்டனில் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றார். அப்போது, அவரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்படுவதற்கு முன் வசீகரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“லோக் ஆயுக்தாவுக்காக பல போராட்டங்களை நடத்திய அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சிதான் டெல்லியில் நடக்கிறது. அங்கே கூட, லோக் ஆயுக்தா கொண்டுவரப்படவில்லை. உங்கள் போராட்டத்தால் இங்கு அதைக் கொண்டு​வர முடியும் என்று நினைக்கிறீர்களா?”

“கெஜ்ரிவால் தலைமையிலான அரசு லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று சட்டசபையில் அறிக்கை வெளியிட்டது. ஆனால், அது பிரதமர் மோடியால் தடுத்து நிறுத்தப்பட்டது. உள்துறை அமைச்சகம், ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை. ஒப்புதல் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்ப்பட்டு வருகிறது. அதுபோலதான், தமிழகத்திலும் லோக் ஆயுக்தா வந்துவிடக்கூடாது என்று தமிழக அரசு செயல்படுகிறது. அதற்காகப் பல போராட்டங்களை நடத்திவிட்டோம். இனி, அது பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடம் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.”

“அப்படி என்றால் மோடியும், ஜெயலலிதாவும் நினைத்தால்தான் ஊழலை ஒழிக்க முடியுமா?”

“இவர்கள் இருவரும் ஊழலுக்கு எதிரானவர்கள் அல்ல. ஊழலின் ஆணிவேரே இவர்கள்தான். லோக்ஆயுக்தா, லோக்பால் சட்டங்களை அமல்படுத்தினால் இவர்களின் பதவிகள் பறிபோவது உறுதி. எனவே, ஒருபோதும் அவற்றை இவர்கள் கொண்டுவரமாட்டார்கள்.”

“ ‘தமிழ்நாடு, ஊழல் இல்லாத மாநிலம் என்று தைரிய​மாகச் சொல்வேன்’ என முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி சொல்கிறாரே?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்