அடுத்த அதிரடிக்கு தயாராகும் ஜெ!

சென்னையில் இருந்து ஆரம்பம்மாற்றம்

ட்டமன்றத் தேர்தலைப்போல, உள்ளாட்சித் தேர்தலிலும் சரிவு தொடர்ந்து விடக் கூடாது என்று உஷார் ஆகியிருக்கிறது அ.தி.மு.க தலைமை. அதன் எதிரொலியாக, சென்னை அ.தி.மு.க நிர்வாகிகளைக் களையெடுத்து ஷாக் கொடுத்து இருக்கிறார் ஜெயலலிதா.

தி.மு.க-வின் கோட்டை என்று சொல்லப் பட்டு வந்த சென்னை மாநகரில், 2011 சட்டமன்றத் தேர்தலில், 14 தொகுதிகளில் வெற்றிக்கோட்டை கட்டியது அ.தி.மு.க.

இரண்டு தொகுதிகளில் மட்டுமே தி.மு.க-வால் ஜெயிக்க முடிந்தது. அந்த வெற்றியைக் கண்டு அ.தி.மு.க-வினரே அதிசயித்துப்போனார்கள். பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க-வே மேயர் பதவியைக் கைப்பற்றியது. முதல் தடவையாக, சென்னை மாநகராட்சி மேயர் பதவி அ.தி.மு.க-வின் வசம் வந்தது. ஆனால், பெற்ற வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளஅ.தி.மு.க-வினர் தவறிவிட்டனர். அ.தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்களைவிட அ.தி.முக-வின் மாநகராட்சிக் கவுன்சிலர்களின் அடாவடித்தனம், நிர்வாகிகளின் வசூல்வேட்டை போன்றவை, அ.தி.மு.க-வின் தலைமையை எரிச்சலுட்டின. அ.தி.மு.க தலைமைக்கு, அனைத்து வார்டுகளில் இருந்தும் புகார்கள் வந்துகொண்டே இருந்தன. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஒரே வருடத்தில், கவுன்சிலர்கள் அனைவரையும் வரவழைத்து, ‘திருந்துங்கள்...அல்லது தீர்த்துவிடுவேன்’ என்று எச்சரித்து அனுப்பினார் ஜெயலலிதா. சிலர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக மாற்றப்பட்டனர்.

கடந்த ஆண்டு, சென்னையைப் புரட்டிப்போட்ட கனமழையால், கவுன்​சிலர்களின் குட்டு வெளிப்​பட்டது. பல இடங்களில் அடிப்​படை வசதிகள் கூட இல்லை என்பதை அந்த மழை அம்பலப்படுத்தியது. அப்போதே, அ.தி.மு.க-வின் ​தலைமை அலுவலகத்தில் மாநகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர்களின் கூட்டத்தைக் கூட்டிய நால்வர் அணியினர், “உங்களால்தான், இந்த ஆட்சிக்குக் கெட்டபெயர். இது அம்மாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஒழுங்காகப் பணியாற்றுங்கள்” என்று எச்சரித்தனர். ஆனால், அந்த எச்சரிக்கையையும் காற்றில் பறக்கவிட்டு, கவுன்சிலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் அட்டகாசங்களைத் தொடர்ந்தனர். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 தொகுதிகளில்,

6 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க வெற்றி பெற்றது. அமைச்சர்களாக இருந்த வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.

“மாநகராட்சிக் கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகளின் உள்ளடி வேலைகளும், மக்களிடம் அவர்கள் அதிருப்தியைச் சம்பாதித்து விட்டதும்தான், இந்தத் தோல்விக்குக் காரணம்” என்று புகார் சொல்லப்பட்டது. அதை சீரியஸாகவே எடுத்துக் கொண்டுள்ளார் ஜெயலலிதா. இதைத் தொடர்ந்து, சென்னையில் இரண்டு மாவட்டச் செயலாளர்களை மாற்றி அதிரடியில் இறங்கினார் ஜெயலலிதா. அதன் தொடர்ச்சியாக, இப்போது மாவட்ட நிர்வாகிகள், வட்டம், பகுதி என பலருடைய பொறுப்புகளை  மாற்றியும், சிலரிடமிருந்து பொறுப்புகளைப் பறித்தும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். குறிப்பாக, தென் சென்னை வடக்கு மாவட்டத்தில் 14 வட்டச் செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்​பட்டுள்ளன. இரண்டு பகுதிச் செயலாளர்கள் தூக்கி அடிக்கப்பட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்