அமைச்சர் கருப்பண்ணன் அடாவடி... விவசாயிகள் தடாலடி!

போராட்டம்

மிழக விவசாயிகளைப் பற்றி சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் பேசிய இழிவுப்பேச்சைக் கேட்டு ஒட்டுமொத்த விவசாயிகளும் கொதித்துப்போய் இருக்கிறார்கள்.

அப்படி என்னதான் பேசினார் அமைச்சர் கருப்பண்ணன்? இதோ அவரது பேச்சு... ‘‘என்ன தண்ணீர் இல்ல... குடிக்கத் தண்ணீர் இல்லையா... தோட்டத்தில் விவசாயம் பண்ண முடியவில்லையா? விவசாயம் செய்யாமல் டவுனையே சுற்றிக்கொண்டிருந்தால் கையில் எப்படிக் காசு இருக்கும்? விவசாயிகள் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கிறார்கள். பவானியில் இருக்கும் விவசாயிகளைப் போய் பாருங்கள். சத்தியமங்கலத்தில் உள்ள விவசாயிகளைப் பாருங்கள். வங்கியில் கோடிக்கணக்கில் பணம் போட்டு வைத்திருக்கிறார்கள்; வட்டிக்குப் பணம் கொடுக்கிறார்கள்; ஃபைனான்ஸ் செய்கிறார்கள்; லாரி வைத்திருக்கிறார்கள்; விவசாயம் சார்ந்த பல தொழில்கள் செய்கிறார்கள். ஆனால், ஒரு சென்ட் நிலம் கூட இல்லாதவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துகிறார்கள். ஊடகங்களில் தங்கள் பெயர் வரவேண்டும் என்ற விளம்பரத் துக்காகப் போராடுகிறார்கள். அரசையும், நம்மையும் இவர்கள் ஏமாற்றுகிறார்கள்’’ - இப்படி அமைச்சர் கருப்பண்ணன் கடந்த 4-ம் தேதி ஈரோட்டில் நடந்த வியாபாரக் கடன் மேளாவில் பேசினார்.

கர்நாடக, கேரள மாநிலங்களுக்கு எதிராக தமிழக விவசாயிகள் கொந்தளித்து போராட்டங்கள் நடத்திக் கொண்டு இருக்கும் இந்தச் சூழலில், தமிழக அமைச்சர் இப்படி ஆணவத்துடன், அடாவடித்தனமாக பேசியது பலத்த கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எதையுமே பேசாத ஊமைகளாக இருக்கும் அமைச்சர்கள், மக்களுக்கு எதிராக, உழைப்பாளிகளுக்கு எதிராக மட்டும் எப்படி இப்படி விவஸ்தைகெட்டுப் பேசுகிறார்கள் என்பதை நினைக்க கொந்தளிப்பாக இருக்கிறது. இதுகுறித்து விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகளிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்