கொட்டப்பட்டு குளம் - ஆக்‌ஷனும் ரியாக்‌ஷனும்!

FOLLOW-UP

திருச்சி ஏர்போர்ட் அருகே கொட்டப்பட்டு பெரியகுளத்துக்குள் ‘திருச்சி பிரஸ் கிளப்’ உறுப்பினர்களுக்கு நிலம் வழங்கியது தொடர்பாக, ‘குளத்துக்குள் குடியிருப்பு... திருச்சி அதிர்ச்சி!’ என்ற தலைப்பில் கடந்த ஜு.வி. இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதன் ஃபாலோஅப் இது.

‘தண்ணீர் இயக்கம்’ ஒருங்கிணைப்பாளர் வினோத் ராஜ் சேஷன், உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்குப் போட்டிருந்தார். ‘கொட்டப்பட்டு பெரியகுளம் முக்கிய நீராதாரமாக உள்ளது. அந்த இடத்தில் மண்ணைக் கொட்டி நிலமாக மாற்றி வருகிறார்கள். பத்திரிகையாளர்களுக்கு வேறு இடத்தில் இடம் ஒதுக்கிக் குளத்தைப் பாதுகாக்க வேண்டும்’ என கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கண்மாயில் பணிகள் மேற்கொள்ள இடைக்கால தடை விதித்ததுடன், வருவாய்த் துறைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித் துறை செயலாளர்கள், நில நிர்வாக ஆணையர், திருச்சி கலெக்டர், மாநகராட்சி ஆணையர், பிரஸ் கிளப் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்