கழுகார் பதில்கள்!

படம்: என்.ஜி.மணிகண்டன்

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

அவ்வப்போது தமிழக அரசியல் பற்றி ஏதாவது அறிக்கை வெளியிடும் மு.க.அழகிரி, எதிர்க் கட்சித் தலைவராக ஸ்டாலின் செயல்பாடு பற்றி எதுவும் விமர்சனம் செய்யவில்லையே?

‘போதுமடா சாமி... ஸாரி... போதுமடா தம்பி’ என்று நினைத்து இருக்கலாம்.

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

காவிரிப் பிரச்னை தொடர்பான விவசாயிகள் போராட்டத்துக்கு தமிழக அரசு ஏன் ஆதரவு தரவில்லை?

காவிரிப் பிரச்னை தொடர்பான விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு ஆதரிக்கும். ஆனால், அதற்கான போராட்டத்தை ஓர் அரசாங்கம் ஆதரிப்பது மரபு ஆகாது என்று நினைத்திருக்கலாம். அவை சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மாறும் என்பதாலும் அரசாங்கம் நேரடியாகத் தலையிட முடியாது.

அதே நேரத்தில் கர்நாடக விவசாயிகளின் போராட்டத்துக்கு அந்த மாநில அரசு மறைமுக தூண்டுதலானது தேசிய மாநில ஒற்றுமைக்கு விரோதமானது.

வீ.ஹரிகிருஷ்ணன், திருச்சி-17.

அதிரடி மனிதர்களை துணைக்கு வைத்துக் கொள்வது, எதிர்க் கட்சிகளை தனக்கு ஆதரவாக மாற்றுவது, சாதி ஆதரவு திரட்டுவது என்று தவறுக்கு மேல் தவறு செய்கிறார் சசிகலா புஷ்பா. இதன் மூலம் அவர் என்ன சாதிக்க நினைக்கிறார்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்