இமானுவேல் குருபூஜை ஜெ.ஏன் போவதில்லை?

கேள்வி எழுப்பும் அமைப்புகள்...புறக்கணிப்பு

மானுவேல் சேகரனின் 59-வது குருபூஜை கடந்த 11-ம் தேதி பரமக்குடியில் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. ‘இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்க வேண்டும்’ என தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த அமைப்புகள் அழைப்பு விடுத்தன. ஆனால், ஜெயலலிதா பங்கேற்கவில்லை.

தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவர் சுரேஷ், ‘‘தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் விடியலுக்காகப் போராடி மடிந்த தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக வைத்து வருகிறோம். அதை அரசு கண்டுகொள்ளவே இல்லை. இமானுவேல் சேகரனின் சமாதியில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு நிறைவேற்றாததால் நாங்களே சொந்த செலவில் நினைவிடம் அமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம். காலாடி, பண்ணாடி, வாதிரியர், குடும்பன், பள்ளர் என 7 பிரிவுகளாக உள்ள எங்கள் சமுதாயத்தைத் ‘தேவேந்திரர் குலம்’ என ஒரே சமுதாயமாக அறிவிக்குமாறு கோரிக்கை வைத்தோம். 2010-ம் ஆண்டு, அப்போதைய தி.மு.க அரசு இதற்கென ஒரு குழுவை அமைத்தது. ஆனால், அந்தக் குழுவுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. அதன்பின் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசிடமும் கோரிக்கையை வலியுறுத்தினோம். முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் எடுத்துரைக்கப் பலமுறை அனுமதி கேட்டுக் கடிதம் கொடுத்தோம். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

2011-ல் இமானுவேல் சேகரனாரின் குருபூஜையின்போது, பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுத்துள்ளது. ஆனால், அதில் காயமடைந்த, பாதிப்படைந்தவர்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை. அந்தச் சம்பவத்தில் தீர்ப்புக்கனி என்ற வாலிபரை அடித்தே கொன்ற போலீஸாரின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாநில போலீஸார் நடத்தும் விசாரணை நியாயமாக இருக்காது என கருதிதான், சி.பி.ஐ விசாரணை கேட்டு நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றமும், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து

சி.பி.ஐ விசாரணை தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதன் நிலை என்னவென்று தெரியவில்லை. ஆண்டுதோறும் இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு அ.தி.மு.க சார்பில் அஞ்சலி செலுத்த நான்காம் நிலையில் உள்ள அமைச்சர்களே அனுப்பி வைக்கப்படுகிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்