"வேண்டப்பட்ட அமைச்சர்களுக்கு கேள்வி நேரம் ஒதுக்குகிறார்!"

சர்ச்சையில் சட்டமன்றச் செயலாளர்!குற்றச்சாட்டு

டந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடர் அமளி துமளியுடன் நடந்து முடிந்திருக்கிறது. சட்டமன்ற ஊழியர்​களின் பிரச்னை வெடிக்கக் காத்திருக்கிறது.

என்னதான் பிரச்னை? சட்டமன்ற ஊழியர்கள் வட்டாரத்தில் பேசினோம்.

“2010-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில், சட்ட மேலவை அமைக்க வேலை நடைபெற்றபோது அதன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் ஜமாலுதீன். அ.தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு சட்டமன்றச் செயலாளர் ஆனார். அவரது பதவிக்காலம் முடித்து, மீண்டும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு, தற்போது வரை செயலாளராக இருக்கிறார். இப்போது, மீண்டும் பணி நீட்டிப்பு பெற விரும்புகிறார். இப்படி பணி நீட்டிப்புகள் வழங்கப்படுவதால் பதவி உயர்வு கிடைக்காமல் பலரும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த முறை, செங்கோட்டையன்​தான் இவருக்குப் பணி நீட்டிப்பு வாங்கிக் கொடுத்தார். இந்த முறை பணி நீட்டிப்பு வாங்குவதற்காக மூவ் செய்து வருகிறார். அதில் ஒன்றுதான் சட்டமன்றக் கேள்வி நேரம். சட்டமன்றத்தில் கேள்வி நேரம் காலை 10 மணிக்கு தொடங்கும். கேள்வி நேரம் முடியும் நேரத்தில்தான் முதல்வர் வருவார். அந்த நேரத்தில் கேள்விக்குப் பதில் சொல்ல அமைச்சர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவும். அதாவது முதல்வரிடம் நல்ல பெயர் வாங்கிப் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள அமைச்சர்கள் நினைப்பார்கள். அதே நேரம், அந்தக் கேள்வியை எழுப்பியவரும் முதல்வரின் பார்வைக்கு வருவார். அதனால் கடைசிக் கட்ட கேள்விகளுக்கு டிமாண்ட் அதிகம். அதை ஜமாலுதீன் பயன்படுத்திக் கொள்கிறார். சபையை நடத்துவது மட்டும்தான் சபாநாயகர். மற்றவை எல்லாமே செயலாளர்தான். கேள்விகளை ரெடி பண்ணி, எந்த வரிசையில் ஒதுக்குவது என்பது ஜமாலுதீன் வேலை. தனக்கு வேலையை முடித்துக் கொடுக்கும் அமைச்சர்களுக்கு இந்தக் கேள்விகளை ஒதுக்குவார். இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரும் உடந்தை.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் செய்தித்தாள்கள், ஆண்டு அறிக்கை, பட்ஜெட் புத்தகம் ஆகியவற்றை எல்லா எம்.எல்.ஏ-க்களும் எடுத்துக்கொண்டு போவது இல்லை. வருடக் கடைசியில் எடைக்குப் போடுவார்கள். இது எல்லாம் டி.என்.பி.எல்-க்குப் போக வேண்டும் என்பதுதான் நடைமுறை. ஆனால் தனக்கு வேண்டிய நிறுவனத்​துக்கு ஜமாலுதீன் டெண்டர் கொடுத்திருக்கிறார். சட்டமன்றம் நடைபெறும்போது, ஊழியர்களுக்கு இரவு உணவு வாங்குவது வழக்கம். அதை நிறுத்திவிட்டார்” என குமுறினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்