சாத்தூர் எம்.எல்.ஏ.வை ஆட்டிப்படைக்கும் வாஸ்து!

நம்பிக்கை

சாத்தூர் - கோவில்பட்டி சாலையில் வைப்பாற்றை ஓட்டி இருக்கிறது சாத்தூர் எம்.எல்.ஏ. அலுவலகம். இப்போது வாஸ்து பிரச்னையில் சிக்கி, தாறுமாறு தக்காளி சோறாகியுள்ளது இந்த இடம்.

துரையில் வசித்த ஆர்.பி.உதயக்குமார் சாத்தூர் தொகுதியில் நின்று வென்றதோடு அமைச்சரும் ஆனார். தொகுதிக்கு வரும்போது சாத்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்தபடிதான் பணிகளை கவனித்தார் ஆர்.பி.உதயக்குமார். அப்போது லோக்கல் கட்சியினர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ‘வாஸ்து’ பிரச்னை இருப்பதை அவரது காதில் போட்டனர். அதை அவர் கண்டு கொள்ளவில்லை.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் 8 கி.மீ. தூரத்துக்கு முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று மின் விளக்குகளால் அலங்காரம் செய்ததால் ஜெயலலிதாவிடம் டோஸ் வாங்கினார். அதோடு அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது. எட்டே மாதங்களில் பதவி போனதில் அப்செட் ஆனார் உதயக்குமார். அப்போது மீண்டும் ‘வாஸ்து’ விவகாரத்தை கட்சியினர் நினைவுபடுத்த, அதன்பிறகு எம்.எல்.ஏ. அலுவலகத்தின் பின்புறம் கூரை செட் போட்டு நூலகம் மாதிரி அமைத்து அங்கேதான் பணிகளை கவனித்து வந்தார். தப்பித் தவறிக்கூட அலுவலகத்துக்குள் செல்லாமல் பார்த்துக்கொண்டார். சீக்கிரமே இழந்த அமைச்சர் பதவியை மீண்டும் பெற்றார். எந்தப் பங்கமும் இல்லாமல் ஆட்சி முடியும் வரையில் பதவியில் தொடர்ந்தார். கடந்த தேர்தலில் சாத்தூரில் இருந்து மதுரை திருமங்கலம் தொகுதிக்கு ஷிப்ட் ஆனார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்