ஐ.ஏ.எஸ் யுத்தம்... ஆபரேஷன் நத்தம்!

ரெய்டு

மிழகத்தில் ஒரே நேரத்தில் 40 இடங்களில் வருமானவரித் துறை அதிரடி ரெய்டு நடத்தியது. இதில் ஒட்டுமொத்த டார்க்கெட், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளைக் கவனித்தவர் நத்தம் விசுவநாதன். சட்டமன்றத் தேர்தலில் தோற்று தற்போது, சென்னை எம்.ஆர்.சி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விசுவநாதனின் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் அவருடைய அமைப்புச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பொறுப்புகள் பறிக்கப்பட்டது பெரிய அதிர்ச்சி. ரெய்டு விவகாரத்தில் நத்தம் விசுவநாதன் மீது தலைமை கோபத்தில் இருப்பதையே இது காட்டியது.

யார் அந்த பிசினஸ் பார்ட்டனர்?

மின்துறைக்கான நிலக்கரியை இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வாங்கியது, வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற்றது ஆகியவற்றில் ஊழல் தலைவிரித்து ஆடியது. இதை கண்கொத்திப் பாம்பாக மத்திய அரசின் அமலாக்கப்பிரிவும், ரெவின்யூ இன்டலிஜென்ஸ் பிரிவும் கவனித்து வந்தன. இந்த நிலையில் இந்தோனேஷியா, போர்ச்சுக்கல் நாடுகளில் உள்ள பிசினஸ் புரோக்கர்கள் சிலரின் கோஷ்டி மோதலில், ஒருவரை ஒருவர் மாட்டிவிடும் நடவடிக்கையில் இறங்கினார்களாம். லண்டனில் உள்ள ஒரு ஹோட்டலை விலைக்கு வாங்கியதன் பின்னணியில் புரோக்கராக செயல்பட்டவரின் ஜாதகமே தற்போது அமலாக்கப்பிரிவிடம் உள்ளது. சர்வதேச நாடுகளில் கறுப்புப் பணத்தை தடங்கல்கள் இல்லாமல் முதலீடு செய்வதற்கு ஏதுவாக, போர்ச்சுக்கல் நாட்டில் குடியுரிமையை வாங்கியிருக்கிறார் தமிழக பிசினஸ் புள்ளி ஒருவர். மதுபானத் தயாரிப்புகளுடன் தொடர்பில் உள்ள அவர், நத்தம் விசுவநாதனின் மகன் அமர்நாத்தின் நட்பு வட்டாரத்தில் இருந்ததாக ஒரு தகவல் உண்டு. மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் நிர்வாகத்தில்தான் வருமானவரித் துறை வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இருப்பவர் அருண்ஜெட்லி. இருந்தும் அதிரடியாக ரெய்டு நடந்ததை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர்.

ஞானதேசிகனுக்கும் விரைவில் சம்மன்?

நிலக்கரி வாங்கியது தொடர்பான முறைகேட்டில், மின் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஞானதேசிகனும் சிக்குகிறார். அந்தப் பதவியில் இருந்த பிறகு தலைமைச் செயலாளர் ஆனார். பின் டிட்கோ சேர்மன் ஆனார். சில நாட்களுக்கு முன்புதான், திடீரென அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதான நடவடிக்கைகளுக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், மின்துறை ஊழல்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். இதை எப்படியோ முன்கூட்டியே தெரிந்துகொண்ட முதல்வர் ஜெயலலிதா, ஞானதேசிகனை சஸ்பெண்ட் செய்தார் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

ஐ.ஏ.எஸ் யுத்தம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்