“சர்டிபிகேட் இருந்தால்தான் எங்க பிள்ளையா?”

பரிதவித்த பெற்றோர்... சேர்த்துவைத்த ஜூ.வி!வேதனை

“மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களை மீட்கப் போராடிய பெற்றோரின் கதை இது.

‘‘14 வயதுடைய ஒரு சிறுவனை செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நலக் குழுமம் மூலமாக மீட்டுவிட்டோம். இன்னொரு 8 வயது சிறுவனுக்கு பிறப்புக்கான ஆதாரம் எதுவும் அவர்களிடம் இல்லை. இதனால் குழந்தைகள் நல குழுமம் அந்தச் சிறுவனைப் பெற்றோரிடம் ஒப்படைக்க மறுக்கிறது. அந்தச் சிறுவனை மீட்க உதவ முடியுமா?” என மதுராந்தகம் பகுதியில் இருந்து லோகராஜ் என்ற சமூக சேவகர் விகடன் அலுவலகத்தைத் தொடர்புகொண்டார். உடனே அங்கு விரைந்தோம்.

பெற்றோரைப் பிரிந்த சோகத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த அந்த சிறுவன் நீண்ட நேரமாக யாரிடமும் பேசாமல் பயஉணர்ச்சியோடு விசும்பிக் கொண்டிருந்தான். எந்த ஆறுதலாலும், அவன் அழுகையையோ, கண்ணீரையோ நிறுத்த முடியவில்லை. இன்னொரு பக்கத்தில் சிறுவனின் அம்மா ஜீவா முந்தானையால் கண்ணீரைத் துடைப்பதும் அழுவதுமாக இருந்தார். அம்மாவையும், பிள்ளையையும் பிரித்த அரசாங்க விதிகள் காண்போரை சங்கடத்தில் ஆழ்த்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்