வராத ‘காவிரி’... வெடிக்கும் இனவெறி!

முதல்வருக்கு அவமரியாதை... மண்டியிட்ட சுரேஷ்குமார்... மன்னிப்பு கேட்ட ஐ.ஏ.எஸ்... திரி கொளுத்திய திவேதி...

‘காவிரியில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்கக்கூடாது’ என சொல்லி தமிழக முதல்வரின் உருவப்படங்கள் அவமதிப்பு, தமிழக வாகனங்கள் மீது தாக்குதல், தமிழ் சேனல்கள் முடக்கம், தமிழ் பத்திரிகைகள் எரிப்பு, தமிழ்த் திரைப்படங்கள் தடை என கர்நாடகாவில் நடத்தப்படும் போராட்டங்கள் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளாக வெடித்திருக்கின்றன. 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘அடுத்த 10 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டும்’ என 5-ம் தேதி உத்தரவிட்டது. அந்த நிமிடத்தில் இருந்து கர்நாடகா அனல் கக்க ஆரம்பித்தது. கர்நாடகம் மற்றும் தமிழகத்துக்கு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டன. ‘சுப்ரீம் கோர்ட்டில் சரியாக வாதாடவில்லை’ என சொல்லி கர்நாடக முதல்வர் சித்தராமையா, வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆகி​யோரின் உருவப்படங்களைத் தீயிட்டு கொளுத்தினார்கள். ஆங்​காங்கே போராட்டம் வெடித்தது. ‘சித்தராமையாவும், பாட்டீலும் பதவி விலகவேண்டும்’ என அவர்களின் வீடுகளை கர்நாடக விவசாயிகள் முற்றுகை​யிட்டனர். இப்படிப்பட்ட சூழலில்தான் 9-ம் தேதி கர்நாடகாவில் பந்த் நடை​பெற்றது. கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்த பந்தால் பதற்றம் மேலும் பலமடங்​கானது. தமிழகப் பதிவு எண் கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்​பட்டன. கர்​நாடகாவுக்குச் சென்ற தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

‘வீடுபுகுந்து தாக்குவோம்!’

‘கன்னட ரக்‌ஷன வேதிகே’ என்ற அமைப்பைச் சேர்ந்த தர்மேந்திரா, “கர்நாடக போராட்டத்துக்கு கர்நாடகா​வில் வசிக்கும் தமிழர்கள் ஆதரவு தெரிவிக்க​வில்லை என்றால் தமிழர்களை வீடுபுகுந்து தாக்கு​வோம். 1991-ல் நடந்ததுபோல மீண்டும் நடக்கும்” என மிரட்டல் விடுத்தார். அதனால், கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் அச்சத்தில் உறைந்தனர். தமிழ் படங்கள் திரையிடப்​​பட்ட தியேட்டர்கள் துவம்சம் செய்தனர். தமிழகத்தை சேர்ந்த ஆறு லாரிகளை அடித்து நொறுக்கினர். பத்திரிகை அலுவலகங்​களின் தமிழ் பெயர்ப் பலகைகளை அகற்றச் சொல்லி ஆர்ப்பரித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்