யாப்பு

டொனமூர் முதல் சிறிசேனா வரைமு.திருநாவுக்கரசுவிமர்சனம்

ரசியல் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் தொடர் தோல்வியைத் தழுவிய நிலையில் கையறு நிலையில் நிற்கிறான் ஈழத்தமிழன். அதற்கு அகத் திலும் புறத்திலும் ஆயிரம் காரணங்கள். எது காரணமாக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துதானே ஆகவேண்டும்? சோகத்தைச் சுமந்து சுணங்கிப் போக முடியுமா? சுணக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வந்திருக்கிறது மு.திருநாவுக்கரசுவின் இந்தப் புத்தகம். ஈழத்தமிழர் வாழ்க்கையை தமிழ் உணர்ச்சிமயமாக இல்லாமல், சிங்கள இனவாதமாக பார்க்காமல் மிக நுண்மையாக ஆராய்கிறார் மு.திருநாவுக்கரசு.

சர்வதேச உறவுகள், புவிசார் அரசியல், கொள்கை வகுப்பு, ராஜ தந்திரம், உலக வரலாறு, அரசியல் சிந்தனை வரலாறு, பொருளாதார வரலாறு, அரசியல் சித்தாந்தம் போன்ற துறை ரீதியான அறிவின் மூலமாக ஈழ அரசியலை ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகம் இது. அதாவது காலனி ஆதிக்கம் முதல் இன்று வரை நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தும் ஈழத் தமிழனது இடுப்பை ஒடிப்பதற்காக எப்படிப்பட்ட வார்த்தை ஜாலங்களுடன் உருவாக்கப்பட்டன என்ற வரலாற்று நகர்வுகளுடன் இந்த நூல் பயணிக்கிறது.

சிங்கள இனவாதம் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு காரணமா? விடுதலைப் புலிகளை ஒடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் எண்ணம் மட்டுமே காரணமா? கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவுக்குப் பக்கத்தில் இலங்கை இருப்பதுதான் காரணமா?... என்றால் மூன்றுமேதான். இவை அனைத்தும் இதுவரை பேசப்பட்டன. ஆனால், மு.திருநாவுக்கரசு அதைத் தாண்டிய ஒரு காரணத்தைச் சொல்கிறார். சிங்கள - பெளத்தர்களுக்கும் இந்தியாவுக்கும் தொடர்ச்சியாக இருக்கும் பகைமைதான் இதற்குக் காரணம் என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்