கூலிப்படை... ரவுடிகள் யுத்தம்... பொன்முடி பி.ஏ...

பத்தர் செல்வம் to செல்வராஜ் பழிக்குப் பழி

வுடிகளில் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டியில்தான் அதிகமான கொலைகள் நடப்பதுண்டு. ஆனால், எந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன.

தமிழகத்தில், சாதி ரீதியிலான முன்விரோதக் கொலைச் சம்பவங்களில், கடந்த 30 வருடங்களாக முன்னணியில் இருக்கிறது விழுப்புரம் மாவட்டம். மருதூர் கோவிந்தன், மின்னல் ராஜா, ஆர்.கே.சிவா, ஆர்.கே.நாராயணன், கேசவன், சௌந்தர், முருகன் என ரவுடிகளுக்கு உள்ளேயே நடந்த அதிகாரப் போட்டியில், வெட்டி சாய்க்கப்பட்டவர்களின் பட்டியல் நீள்கிறது. கடந்த 14-ம் தேதி விழுப்புரத்தில் நடந்த தி.மு.க பிரமுகரின் படுகொலை தமிழக அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. தி.மு.க-வின் விழுப்புரம் நகரச் செயலாளரான சி.வி.செல்வராஜ் கொலைசெய்யப்பட்டு உள்ளார். ஓர் அரசியல் கட்சியின் நகரச் செயலாளராக இருந்தவர் மீது ரவுடி முத்திரையும், அதற்கான பின்னணியும் இருந்தது வேதனைக்கு உரியது. இப்படிப்பட்ட நபரை எல்லாம் ஒரு அரசியல் கட்சி, நகரச் செயலாளராக வைத்திருந்தது கொடுமையானது.

இவர் தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடியின் நேர்முக உதவியாளராகவும் இருந்தவர். விழுப்புரம் வடக்கு ரயில்வே பகுதியில் தினமும் காலையில் நடைப்பயிற்சி செல்லும் வழக்கம் செல்வராஜுக்கு உண்டு. அவர், கடந்த

14-ம் தேதி காலை 5.30 மணி அளவில் தன் ஆதரவாளர்கள் ஆறு பேருடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அங்கே இருக்கும் கிறிஸ்தவ தேவாலயத்தைக்  கடந்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்று இவர்கள் முன்பாக வந்து நின்றது. அதில் வந்த மூன்று பேர், செல்வராஜ் அருகே சென்று அவருக்கு வணக்கம் வைத்துக் கை குலுக்கி உள்ளனர். அவர்களிடம், ‘சொல்லுங்கப்பா...’ என்று செல்வராஜ் கேட்டுள்ளார். அப்போது திடீரென்று அவர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வராஜின் கழுத்தில் ஓங்கி வெட்டியுள்ளனர்.

உடனே, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், செல்வராஜ் தப்பித்து ஓடமுடியாதவாறு அவரை மடக்கியுள்ளனர். ‘இந்த ஆளைப் போடப் போறோம்... நீங்க ஓடிருங்க’ என்று செல்வராஜுடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை எச்சரித்துள்ளனர். ஆனால், ஜெயப்பிரகாஷ் என்பவர், அவர்களைத் தடுக்க முயன்றுள்ளார். அவர் கையில் வெட்டு விழுந்தது. உடனே, செல்வராஜுடன் வந்த அனைவரும் ஓடிவிட்டனர். அடுத்து தடுக்க முயன்ற செந்தில் என்பவரும் தாக்கப்பட்டார். அவர், அருகில் இருந்த புதரில் மயங்கி விழுந்தார். பின்னர், சரிந்து விழுந்த செல்வராஜை துள்ளத்துடிக்க வெட்டிய அந்த கும்பல், அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிசெய்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் சாவகாசமாக அங்கிருந்து சென்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்