இனவெறியால் இமேஜ் பாதிப்பு!

சிக்கலில் சிலிக்கான் பள்ளத்தாக்கு...இழப்பு

ன்ஃபோசிஸ், விப்ரோ, எம்ஃபசிஸ், ஆரக்கிள், டெல், டி.சி.எஸ் உட்பட ஏராளமான மென்பொருள் நிறுவனங்கள், கால்சென்டர்கள், பி.பீ.ஓ-க்கள் செயல்படுவதால் ‘இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்ற பெருமை பெங்களூக்கு உண்டு. அந்த இமேஜ், இனவெறி வன்முறையால் இப்போது அடிவாங்கி இருக்கிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்துக்குக் காவிரி நீர் திறந்துவிடப்பட்டதால் கன்னட இனவெறி அமைப்பினரின் தூண்டுதலால் வெடித்த வன்முறை, கர்நாடகத்தின் பொருளா​தாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பெங்களூரில் மென்பொருள் நிறுவனங்கள், பி.பீ.ஓ-க்கள், கால்சென்டர்கள் என 400-க்கும் மேற்பட்ட பன்னாட்டுக் கம்பெனிகளும், பிற தொழில் நிறுவனங்களும் வன்முறைச் சம்பவங்களால் கடந்த 12, 13 தேதிகளில் இழுத்துமூடப்பட்டன. தமிழர்களின் வாகனங்களும், அவர்களின் சொத்துக்களும், நிறுவனங்களும் குறிவைத்துத் தாக்கப்பட்ட சூழலில், தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனங்களில் வந்த ஊழியர்களிடம், இடத்தை காலி செய்யுங்கள் என்று மென்பொருள் நிறுவனங்கள் நிர்ப்பந்தித்துள்ளன. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை, வீட்டில் இருந்தவாறு பணியாற்றுமாறு அறிவுறுத்தின. ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் வெளியூர் ஊழியர்களில் பலர், வன்முறை பீதியில் பெங்களூருவை​விட்டு அச்சத்துடன் வெளியேறினர்.

தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று தங்கள் ஊழியர்களை எச்சரித்த பன்னாட்டு நிறுவனங்கள், பெண் ஊழியர்கள் தனியாகப் பயணம் செய்யவேண்டாம் என்று கேட்டுக்​​கொண்டன. இதுதவிர, பொருட்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்கிற அச்சத்தால் அமேசான், ஃபிலிப்கார்ட் ஆகிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்கள், டெலிவரி சேவைகளை தற்காலிகமாக நிறுத்தின. மூன்று லட்சம் ஊழியர்களுக்கு மேல் பணியாற்றும் ஜவுளி ஆலைகளில், ஊழியர்கள் குறைவாக வந்ததால், உற்பத்தி பாதிக்கப்பட்டது. டொயோட்டா உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்களிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

“சட்டம் ஒழுங்கைக் கையாள முடியாத அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்’’ என்று சில பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் வெளிப்படையாகவே அரசின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். கடந்த 13-ம் தேதி அசோசெம் (இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு) வெளியிட்ட அறிக்கையில், “பெங்களூரு வன்முறையால் 20-25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் வன்முறைச் சம்பவங்கள் பரவிய விதம், வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களை கவலைகொள்ளச் செய்துள்ளது. ‘இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்ற பெங்களூருவின் இமேஜ் பாதிக்கப்​பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டம் ஒழுங்கு விஷயத்தில் சமரசம் செய்யக்​கூடாது” என்று அசோசெம் கூறியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்