மிஸ்டர் கழுகு : காவிரி... ஜெயலலிதா... கள்ள மெளனம்!

ழுகார் அனுப்பிய தலைப்பு வாசகங்கள் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தன. லே அவுட்டுக்குத் தலைப்பை அனுப்பிவிட்டு கழுகாருக்காகக் காத்திருந்தோம். 2011, 2015-ம் ஆண்டுகளுக்கான டைரிகளைக் கையோடு கொண்டுவந்த கழுகார் அதனைப்  புரட்டிவிட்டு பேச ஆரம்பித்தார்.

‘‘சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, முதல்வராக பன்னீர்செல்வம் இருந்தபோதுதான் மேக்கேதாட்டூவில் கர்நாடகம் அணை கட்ட களமிறங்கியது. இதை எதிர்த்து அப்போது விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட ‘பந்த்’தில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றாகக் கைகோர்த்தன. பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும் அந்த பந்தில் பங்கேற்கவில்லை. ‘பந்த்’தில் பங்கெடுக்காமல் போனால் தங்கள் மீது ‘கறை’ படிந்துவிடும் என அஞ்சியோ ‘பந்த்’துக்கு முந்தைய தினம் சட்டசபையில் தனித் தீர்மானம் ஒன்றையும் ஏகமனதாக நிறைவேற்றியது அ.தி.மு.க. அரசு. தீர்மானம் போட்டதிலும் ‘சாஃப்ட் அப்ரோச்’தான். தீர்மானத்தில் கர்நாடகாவைக் கண்டிக்கும் கடுமையான வாசகங்கள் இல்லை. பந்த் நடந்தபோது சட்டசபை கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்தது. அப்போது சட்டசபையில் பேசிய துரைமுருகன், ‘‘அரசே பந்த் நடத்தினால்தான் அது சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரானது. ஆனால், அ.தி.மு.க. பங்கேற்கலாம். பந்த் அன்று நாம் மட்டும் சட்டசபையில் உட்கார்ந்திருந்தால் அது நியாயமாக இருக்காது. விவசாயிகளின் போராட்டத்தை மானசீகமாக ஆதரிக்கிறோம் என்பதைத் தெரிவிக்கும் வகையில் அவையை ஒத்திவைக்க வேண்டும். அது, விவசாயிகளின் போராட்டத்துக்கு இந்த மாமன்றம் காட்டுகின்ற மரியாதை’’ என்றார். ஆனால், அதுபற்றி எந்த ரியாக்‌ஷனும்  அவையில் எழவில்லை. கூட்டம் முடிந்த பிறகு இரவில், ‘சட்டசபை நாளை ஒத்தி வைக்கப்படுகிறது’ என திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அந்த ‘பந்த்தை ஆதரிக்கிறோம்’, ‘இல்லை எதிர்க்கிறோம்’ இரண்டில் ஒன்றை சொல்லியிருக்க வேண்டும். ‘பாம்பும் சாகக் கூடாது. கம்பும் உடையக் கூடாது’ என ‘அமைதி’ காத்தன இந்த இரண்டு கட்சிகளும்.’’

‘‘இந்த ஃபிளாஷ்பேக் இப்போது எதற்கு?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்